எழுதியவர்: அனுஷாடேவிட்
சொல்: விரல்
“மனு தலை வலிக்குடி சூடா டீ கொடுடி” என்றுரைத்தவாறு தன் விரல்களை நெற்றியில் வைத்தபடி மெத்திருக்கையில் சாய்ந்தமர்ந்தான் உணவகத்தில் சமையல் வேலைச் செய்யும் ரகுபதி.
மனு தன் விரல்களால் ரகுபதியின் நெற்றியை மெதுவாக வருடி அழுத்தம் கொடுத்துத் தேய்த்தாள்.
“உன் விரல்ல ஏதோ மந்திரம் இருக்குடி. கைப்பட்டதுமே தலைவலி மாயமா போயிடுச்சு”
“வேலை நேரத்தில் உங்க விரல் விளையாடுவதை விடவா?”
அவன் நேத்திரங்கள் உல்லாசப் பார்வையுடன் அவள் மேனியை வலம் வர அவனை முறைத்தவள்
“ஆசைதான். நான் நீங்க சமைக்கிற வேலையை சொன்னேன்”
“நான் சாப்பிடுர வேலையை சொல்றியோனு நினைச்சேன்”
என்றவன் அவளருகில் வந்து வெட்கத்தில் சிவந்த தன்னவளின் கன்னங்களை தன் விரல்களால் கோடிட்டு மேலும் சிவக்கச் செய்தான். விரலை விலக்கியவன் இதழை இணைக்கும் முயற்சியில் நெருங்க “பால் பொங்கிடுங்க” என்று சமையலறைக்கு ஓடினாள்.
அவளை நிறுத்தியவன் தானே தன் விரல் மந்திரத்தை தேநீர் தயாரிப்பில் காட்ட அவனை ரசனையோடுப் பார்த்திருந்தாள்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.