100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஆகாயத்தோட்டியின் ஆதர்ச அகம்

by admin 2
181 views

எழுதியவர்: அனுஷாடேவிட்

சொல்: முட்டை

அழகான விடியலாய் அந்த முருங்கை மரத்தின் ஒருக் கிளையில் சின்னஞ்சிறுக் கூட்டில் வாழ்ந்திருந்த காக்கை ஜோடிகளுக்கு அமைந்திருந்தது. இருக் காக்கைக்குஞ்சுகள் பொறிந்திருந்தது. இரு முட்டைகள் பொறிக்கக் காத்திருந்தன.

தாய்க்காகமும் தந்தைக்காகமும் இரைத்தேடி வந்து ஆசையுடன் அவைகளுக்கு ஊட்டின. அவைகள் வாங்கி உண்ணும் அழகை ரசித்துக் காதலுடன் தங்கள் இணையைப் பார்த்துக் கொண்டன.

இருநாட்கள் கழிந்த மாலைநேரத்தில் மழைக் கொட்டித்தீர்த்து பூமித்தாயின் தாகத்தைத் தணித்தது. அதில் கூடு இருந்தக் கிளை முறிந்து விழுந்து இரு முட்டைகளும் உடைந்தன. காக்கைக்குஞ்சுகளோ ஒரு ஓரமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. 

இரைத்தேடிப் போயிருந்த காகங்கள் தங்கள் குஞ்சுகள் கீழே விழுந்துக் கிடப்பதையும் முட்டை உடைந்துக் கிடப்பதையும் பார்த்து செய்வறியாது கண்ணீர் வடித்தன.

சிறுவர்கள் கூட்டினை எடுத்து அதில் குஞ்சுகளை வைத்து மழைநீர் படாத இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தார்கள். அவர்களை நன்றியுடன் பார்த்து உடைந்த முட்டைகளுக்காக கண்ணீர் விட்டன அவைகள் குயிலின் முட்டைகள் என்றறியாததால். காகங்களின் உன்னதமான அன்புள்ளம் இதுவே.

முற்றும்.

📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!