100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: காட்சிகள்

by admin 2
157 views

எழுதியவர்: மித்ரா சுதீன்

சொல்: மஞ்சம்

காட்சி ஒன்று:

முதலிரவில் மருண்டபடி பக்கத்தில் மரகதம்.”பயம் வேண்டாம் காலை எழுந்த கலைப்பு …எண்ணெய் குளியல் …ஹோமபுகை கண்ணெரிச்சல் அசதியா இருக்கும் படு பக்கத்துல நா படுத்துக்றேன் அம்மாவா நினச்சிக்க படு “.-வாசு
காலையில் வாசுவின் கை அவளை அணைத்தபடி இருந்தது அன்னையே தான் மனம் குளிர்ந்தது.

காட்சி இரண்டு :
கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தூக்க கலக்கத்துடன் மரகதம் “பால் புகட்டிட்டியா படு நா பாத்துக்கிறேன் “வாங்கிக்கொண்டான்.

“இந்தாங்க கஷாயம் குடிச்சிட்டு படுங்க காய்ச்சல் விட்டிரும் தைலம் தேய்ச்சி விடறேன்”தேய்த்து விட்டு கால் பிடிக்க கண்ணயர்ந்து தூங்கினான்

காட்சி மூன்று :
காலை கண் விழிக்க தன் மேல் இருந்த கை சில்லிட “திலீபா “அம்மா கத்த முடிந்திருந்தது ஒரு சகாப்தம்.

காட்சி நான்கு :
“அம்மா வேன் புறப்பட்டாச்சு  கட்டில குடுத்ததும் புது வீட்டுக்கு கிளம்பிடலாம்

“திலீபா அப்பா நம்மோடு வரட்டும் “என்றாள் அந்த மஞ்சத்தை பார்தபடி.

“சரி”.

முற்றும்.

📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!