எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: சந்தனம்
அமைச்சரே, நம் படையைத் திரட்டுங்கள், எதிரி நாட்டுடன் போரை எதிர்கொள்கிறேன். அதை விடுத்துக் கேவலம் ஒருதாசி வீட்டில் அடைக்கலமா?
வெகுண்ட இளவல் சிம்மராஜனைச் சமாதானப்படுத்தி கோட்டை எல்லையில் இருந்த தாசியின் இருப்பிடத்தில் பத்திரப்படுத்தினர் அரண்மனை மெய்க்காப்பாளர்கள் .
பக்தைபோல் கவனித்துக்கொண்ட தன்னை இழிவாக நோக்கிய சிம்மராஜனிடம், நாங்களும் மனிதர்கள்தான் பிரபுவே, நீங்கள் அரசர், நான் தாசி , இவை நம் குல அடையாளங்கள் அவ்வளவே .. இப்படித் தன் பேச்சு சாதுரியத்தால் அவன் மனம் வென்றாள்.
தினமும் மணக்கும் சந்தனம் அரைத்துப் பூசியதில் உடல்,மன வெம்மை, தணிய, மெய்மறந்த நிலையில் அவளோடு கூடினான்.
அரண்மனைக்குத் திரும்பும் நாள்.
உன்னை விரைவில் மணப்பேன்,சூளுரைத்த சிம்மராஜனிடம், நம் குல அடையாளங்கள் அதற்கு அனுமதிக்காது பிரபுவே. மணக்கும் சந்தனமே ஆயினும் இருக்கும் இடம் பொறுத்தே பெருமை.
தங்களுக்குக் காணிக்கையாக்கியதில் இந்த உடல் புனிதம் பெற்றது , அதுவே எனக்குப்போதும் ,கூறியவளை விழிகளில் நீர் மல்க அணைத்து விடைபெற்றான் சிம்மராஜன்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.