எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: சீப்பு
நேத்து நாம பார்த்ததைச் சொல்லி எப்படியாச்சும் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடணும், அண்ணனைத் தேடி விரைகிறாள் மாதவி .
நா சொல்றதப் புரிஞ்சிக்குங்க . நாளைக்குக் காலையிலே கல்யாணத்த வச்சிக்கிட்டு இதென்ன கூத்து? எல்லாத்தையும் மறந்துடலாம் சரியா?
அதுக்கு வேற ஆளப்பாரு . நாளைக்குமண்டபத்துல வச்சு நா யாருன்னு காட்டுறேன்.
மணப்பெண் ஜெயஸ்ரீ அந்தக் கோயிலின் ஒதுக்குப்புறமாக இருந்த மண்டபத்தில் யாரோ ஒரு ஆணிடம் விவாதித்ததை இதோ அண்ணனிடம் பற்ற வைக்கிறாள் மாதவி .
மறுநாள்,திருமணமண்டபம். மாதவியின் விழிகள் வாயிலை நோக்கி அலைபாய, மணமகன் ஸ்ரீதரன் ஜெயஸ்ரீ கழுத்தில் தாலி கட்டியே முடித்துவிட்டான்.
அவன் வரமாட்டான் அத்தை. சரியான சைக்கோ, ஜெயஸ்ரீயோட முன்னாள் புருஷன், மிரட்டிஅனுப்பிவைச்சிட்டேன்.
உங்க மகளைக் கட்டலைங்கிற வெறி.
சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னா போயிடும்பாங்க. ஒரு வேளை நீங்க தாலியையே ஒளிச்சு வச்சிருந்தாலும் ஒண்ணும்பண்ணியிருக்க முடியாது.
ஏன்னா, அப்பா ஒப்புதலோட நேத்தைக்கே எங்க கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணிட்டேன்.
மாதவி முகத்தில் ஈயாடவில்லை.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.