100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: உள்ளும்,புறமும் 

by admin 2
64 views

எழுதியவர்: நா.பா.மீரா

சொல்: அன்னாசி 

ராதாகி ருஷ்ணன், வசந்தி ,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டுத் தோட்டப்புல்வெளியில் விருந்து. மகன் ஆதில் மேல்படிப்புக்காக லண்டன் செல்லவிருந்ததால் , நண்பர்கள் , உறவினர்கள் கூடியதில் கொண்டாட்டம்தான்.  .

நகரும்மா, பெரிய மனுசங்க வீட்டு விருந்துல வந்து கலாட்டா பண்ணுறியே ,இதுல அவங்கதான் அழைச்சாங்கன்னு பொய் வேற?

 வெளியே வந்த தம்பதியர் விவரம் சொல்லி மரியாதையுடன் அந்தப் பெண்மணியை உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஆதில், பாட்டிம்மா யாருன்னு தெரியுதா?

சற்றே குழம்பியவனிடம் , அன்னாசிப்பழம் .. உடனே முகம் மலர அந்த மூதாட்டியை அணைத்து விடுவித்ததுடன் பாதம் பணிந்தான்.

இவங்கதான் இன்னைக்கு நம்ம சிறப்பு விருந்தினர்.

ஆதிலோட குழந்தைப் பருவத்துல, எங்களுக்குள்ள உருவாகயிருந்த இடைவெளிய, கண்ணா , இந்த அன்னாசிப்பழம் பாரு, வெளியே தோல் கரடுமுரடா, உள்ளே இனிப்பான பழம். அது மாதிரிதான் உன் பெற்றோரும், எடுத்துச்சொல்லிப்  பக்குவப்படுத்தினாங்க. 

அருமையான  செவிலித்தாய், ராதாகிருஷ்ணன்  சொல்லி முடிக்க, அங்கிருந்த அனைவரும் அவளை நோக்கிக் கைகூப்பியதைக் கண்ட காவலாளி வாய் பிளந்தான்.   

முற்றும்.

📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!