எழுதியவர்: ஆதி தனபால்
சொல்: சந்தனம்
மேகங்கள் கரு நிறத்தை வசீகரிகமாகத் தன் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டிருந்தன… பெருமழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இதுவரைக்கும் நெறையா கடைகளுக்கு திறப்பு விழாவச்சதோட சரி ,எதுவுமே ஒழுங்கா ஓடல.. மொட்ட அடிக்காத குறைதான்.. கடைசியா என்னோட ராசிக்கு பூஜ்சாமான் விக்கிற கட வச்சா ஓகோன்னு வருவான்னு ஒரு ஜோசியக்காரன் சொல்ல.. சந்தனத்தில ஆரம்பிச்சா மங்களகரமா இருக்கும்னு தோன மஞ்சள விட்டு சந்தனத்தில தொடங்கினேன்.. தொடக்கம் முதல் மழைக்குப் பஞ்சமில்லை.. சந்தனத்தில தண்ணிய ஊத்த வேண்டிய அவசியமே இல்லாம போச்சு..என்னோட கடைக்கு முன்னாடி சந்தன ஆறு கந்தனின் மகிமையோடு ஓட ஆரம்பிச்சிருச்சு என பெருமைப்பட்டுக் கொண்டேன்…
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.