எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
சொல்: சந்தனம்
“ஏம்மா….! பகல் முழுவதும் வீட்டில் இருக்கற. ராத்திரி நேரத்தில் எங்கம்மா புறப்பட்ட?” அக்கறையுடன் கேட்டார் அப்பா.
” லைப்ரரிக்கத் தான். இந்த முகத்தோட எப்படி பகலில் போறது. புராஜெக்ட் முடிக்கணும். அதான் ராத்திரி போறேன். “
“சரிம்மா.”
முகத்தை மூடிக் கொண்டு சென்றாள் மல்லிகா.
வழியில் ஒரு முருகன் கோவில். ராஜ அலங்காரம். அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளித்தனர்.
“அம்மா..! முகத்தில் இருந்து துணியை எடு மா.”
துணியை எடுத்தாள். தலையில் நீரைத் தெளித்தனர். ஒருவர் முகத்தில் சந்தனம் தெளித்தார்.
மல்லிகாவிற்கு முகம் முழுவதும் பரு. முகத்தில் சந்தனம் பட்டதும் குளிர்ச்சிமயாக இருந்தது. அப்படியே சந்தனத்துடன் முகத்தை மூடிக் கொண்டு லைப்ரரி சென்றாள்.
ஒரு மணி நேரம் சென்று வீட்டிற்கு வந்தவளுக்கு ஆச்சரியம். ஒரு பரு கூட இல்லை. சந்தானத்தின் மகிமையா? முருகனின் மகிமையா?
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.