எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: விரல்
“நீ டாக்டருக்கு படிக்கணும் உன் விரல்கள் அப்பன் தாத்தனைப் போல உளி பிடிக்காம எனக்கு ஊசி போடணும்”மரியம் பாட்டி லூர்து 12வது பாஸ் பண்ணினவுடனே சொன்னா.
ஜேம்ஸுக்கும் தச்சுத் தொழில்,அம்மா
மரியம், மனைவி ஜெபமேரி பையன் லூர்து.
தூத்துக்குடி தூவிபுரம் 4வது தெருல
மெர்சி கேக்ஸ் கடைக்கு எதுத்தாப்பல இருக்குதில்ல,நீலப் பெயின்ட் அடிச்ச
வீடு அதிலதான் இருக்காக ஜேம்ஸ் குடும்பம்.ஜேம்ஸோட அப்பாரும்
மரவேலைக் கலைஞர்தான். ’லேடி ஆஃப் ஸ்னோ பேசிலிகா’ எனப் புகழ் பெற்ற ‘பனிமலை அன்னை சர்ச்சுக்கு’
தேக்கு மரச் சப்பரம் செஞ்சு கொடுத்து
பெயர் வாங்கினவர்.
அவருக்கு அப்பறம் ஜேம்ஸு அந்த
தொழிலுக்கு வந்தார்.ஆனா ஜேம்ஸு
பையனை படிக்க வச்சார்.திடீர்னு ஒரு
நாள் மரம் அறுக்கற மெஷின்ல விரல்கள் மாட்டி வேலை செய்ய முடியலை.இப்ப லூர்தை நம்பிதான் குடும்பம்.
மனம் கனக்க லூர்துவின் விரல்கள்
பாட்டிக்கு டாக்டராக சிகிச்சை அளிக்க முடியாட்டாலும் தச்சனாய் அழகிய
சவப்பெட்டி செய்தது.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.