எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: மஞ்சம்
கட்டிலுக்கெல்லாம் பேர் வைப்பாளோ? எங்க வீட்டு கட்டிலுக்கு பேருதான் சின்னக் காமு. 7 அடிஅகலம் 10 அடி நீளம் .
அந்தக் காலத்துலயே ராஜஸ்தான் ஆசாரி எங்க வீட்டு ஹால்ல உக்காந்துசெஞ்சது.
யாரோ பழைய மாளிகையை புதுப்பிக்கறப்ப , பர்மா தேக்கு சாமான்களை கழட்டி போட்டாங்களாம், எங்க கொள்ளுத் தாத்தா அதை வாங்கி
பண்ணினது இந்த மஞ்சம் .
கழட்டிஎங்கே வேணா கொண்டு போகலாம், நொடியில திரும்ப பூட்டிடலாம்.
ஊர்ல, யார் கல்யாணம்னாலும், மரியாதையா பத்திரிக்கை வச்சு ‘சின்னக் காமுவை’ அனுப்பிவைங்கனு கேப்பாங்களாம்.
இளம் தம்பதிகளின் ஆசைக் கனவுகளை நிறைவேற்றி
எத்தனையோஇனிய ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டு ஒண்ணும் தெரியாத பாப்பா போலஇருக்கா இவ.
எங்க வீடு ஒண்ணும் பெரிசில்லை. சின்னக்காமுவை கஷ்டப் பட்டு பாட்டியோட ரூம்லதிணிச்சிருக்கோம்.
யாராவது தெரிஞ்சவங்க கேட்டா இன்னைக்கும் சின்னக் காமுவை அனுப்பிவைப்போம்.
உங்களுக்கு வேணுமா?
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.