எழுதியவர்: நா.பத்மாவதி
சொல்: முட்டை
அது ஒரு மழைக்கால நாள்.
அந்த மரப் பொந்தில் காகம் ஒரு கூடு கட்டி வாழ்ந்தது.
அந்தப் பகுதியில்தான் மற்ற எல்லா பறவைகளின் முட்டைகளும் அங்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. மழை கொட்ட ஆரம்பித்தது. காற்று வேகமாக வீசியது. பறவைகள் எல்லாம் அஞ்சியபடி தங்கள் கூண்டுக்குள் தஞ்சம் அடைந்தன.
ஆனால் அங்கே இருக்கும் ஒவ்வொரு முட்டையை பற்றிய கவலையோடு காகம் இருக்க,
மற்ற பறவைகள் “நீங்க அஞ்சலாமா? இந்த மழை நம்மை என்ன செய்யும்?” என்றது.
ஆனால் காகம் “நாமாவது பறந்துடலாம் ஆனால் இந்த முட்டைகளை என்ன செய்வதென கவலையாக இருக்கிறது” என்றது.
மற்ற பறவைகள் சிரித்தன ” அட உடையாமல் திடமாக இருக்கத்தான் தோல் இருக்குது,” என்றன.
காகத்தின் கவலை தீர
மழைத் துளியும் முட்டைகளின் மேல் விழ முட்டைகள் உடையாது பாதுகாப்பாக இருந்தன.
சிலநாள் கழித்து, ஆதவனைக், கண்டதும் முட்டைகள் உடைய அதிலிருந்து குட்டி பறவைகள் வெளியில் வந்தன.
அவசரப்படாது பொறுமை காத்தால் வெற்றி நிச்சயம்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.