எழுதியவர்: உஷாமுத்துராமன்
சொல்: மஞ்சம்
சிவா ஏழ்மையான இளைஞன். அவன் ஒவ்வொரு நாளும் கடின உழைப்பிலேயே வாழ்ந்து வந்தான். அவனது ஒரே ஆசை என்றால், தன் அம்மாவிற்கு ஒரு புதிய மஞ்சத்தை வாங்கித்தர வேண்டும் என்பதே. அவன் எப்போதும் வறுமையில் தத்தளிக்கும் நிலையில் இருந்தாலும், அவனது ஆசை மற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
ஒருநாள், அவன் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, தெருவோர கடையில் பார்த்த மஞ்சம் அவனை கவர்ந்தது. அதற்கு விலை அவனுடைய பட்ஜெட்டை விட அதிகம் இருந்தாலும், அவன் அதை வாங்கும் எண்ணத்திலிருந்தான்.
அடுத்த சில நாட்கள், அந்த மஞ்சத்தை வாங்கும் எண்ணமே அவனைச் சுற்றிக்கொண்டது. ஆபீஸில் அதிகப்படியாக ஓவர் டைம் செய்து கிடைத்த பணத்தை எல்லாம் சேமித்து வந்தான்
சில வாரங்கள் அவன் தேவையான பணத்தைச் சேமித்தான். பணம் சேர்ந்து விட்டது அது மிகவும் மகிழ்ச்சி அடைந்த சிவா ஆவலுடன் அந்த மஞ்சத்தை வாங்கினான். மஞ்சத்தில் தன் அன்பான அம்மா நிம்மதியாக உறங்க போவதே நினைத்து எப்போதும் சந்தோஷமாக இருந்தான்.
மஞ்சத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததும்,வர அம்மா அன்புடன் அதைப் பார்த்து நெகிழ்ந்து அழுதாள். அந்த மஞ்சத்தில் அம்மா உறங்கியதில், சிவாவுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் வர அவனும் நிம்மதியாக உறங்கினான்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.