எழுதியவர்: கௌரி சங்கர்
சொல்: குடை
கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டு இருந்த பொன்னுத்தாயிடம் குடையை தந்துவிட்டு, சாமி தரிசனம் செய்ய சென்றார் தணிகாசலம் – 75 வயது – அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
இது தினமும் நடக்கும் நிகழ்வு. தவறாமல் மாலை 5.30 மணிக்கு வந்து ஒரு மணி நேரம் ஆலயத்தின் உள்ளே சென்று 6 மணிக்கு திரும்பிவிடுவார். கடைகள் விரித்திருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தெரியாத விஷயங்களும் அடுத்த அரை மணியில் தெரியவிருந்தன.
மாணிக்கம் அதே மாதிரியான குடையை ஆறு மணிக்கு வைத்து விட்டு ஆலயத்திற்குள் சென்று வருவான்.
நடப்பது என்ன? குடைகள் மாற்றப்பட்டுவிடும். கண்டுபிடித்தவர் ஆலயத்தின் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய காவல்துறை அதிகாரி கணேசன்.
மாணிக்கம் கொண்டு வருவது நடுக்கம்பியில் போதை பொருள் அடைக்கப்பட்ட குடை. அதை எடுத்துச் சென்று வீட்டு மாடியில் குடியிருக்கும் குமரனுடன் கொடுப்பது தணிகாசலம். வருமானத்தில் 50 சதவீதம் பங்கு. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்ற போர்வையில் தணிகாசலம் நடத்தி வந்த வியாபார நுணுக்கம் சந்தைக்கு வந்து சேர்ந்தது.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.