எழுதியவர்: நா.பத்மாவதி
சொல்: குடை
வீட்டு வாசல் ஆணியில் மாட்டி இருந்த வெளிறிப் போன குடையையே பார்த்துக் கொண்டிருந்தான் முனுசாமி. எத்தனை வெயில்..மழை இரண்டுக்கும் அந்த குடை தாயாக ஓர் சிறந்த பாதுகாப்பும் அரவணைப்பும் கொடுப்பதாக உணர்வான் முனுசாமி.
பத்து முறையாவது குடை ரிப்பேர்காரனிடம் போய் வந்திருக்கும். “அதான் ஒரே கந்தலா இருக்கே தூக்கி போடேம்பா” என்ற மகனிடம் “அப்படி சொல்லாத கண்ணு அது நமக்கு சாமி மாதிரி” என அடிக்கடி அப்பா சொல்ல கேட்டவன் “ஏன் அப்படி சொல்ற காரணம் தெரியணும்” என்ற மகனிடம் “நேரம் வரும்போது சொல்றேன் கண்ணு” என்பான் முனுசாமி.
முனுசாமி பழம், இளநீர், ஜூஸ் என சீசனுக்கு ஏற்றபடி வியாபாரம் செய்பவன். வண்டியில் டேபிளோடு கட்டப்பட்ட குடை இருந்ததால் தான் வெயில், மழை இரண்டிலும் எந்த பாதிப்பும் இன்றி பிள்ளையை நன்று படிக்க வைக்க முடிந்தது.
“அப்படி சொல்லாத கண்ணு அது நமக்கு சாமி மாதிரி”ன்னு ஏன் சொன்னான் னு இப்ப புரிந்து இருக்குமே.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.