எழுதியவர்: கௌரி சங்கர்
சொல்: முட்டை
முட்டையை உடைத்து வாய்க்குள் ஊற்றி விட்டு, ஷூக்கள் அணிந்த கால்களுடன் விடிகாலை 5.00 மணிக்கு தனது வீட்டின் படியில் இருந்து இறங்கி ஜாகிங் பயிற்சியை தொடங்கினான் ஆனந்த். அருகில் அவனுடைய அன்பான நாய் – அனிருத் ஓடிக்கொண்டு இருந்தது.
அது ஒரு இருண்ட தெரு. தெரு விளக்குகள் எரியவில்லை.
சட்டென்று ஆனந்த் முன்பு தோன்றினான், முகமூடி அணிந்த ஒருவன். வினாடியில் பிஸ்டலை அவன் சொடுக்கி சுட, அனிருத் சுருண்டு விழுந்து இறந்தது.
சுதாரித்த ஆனந்த் அவனை லாவகமாக பிடித்து, கழுத்தை நெறிக்கவும், அவன் உண்மையை கக்கினான். உங்கள் மனைவி சொல்லித்தான் நான் சுட்டேன்.
அப்படி என்ன சொன்னாள்?
நீங்கள் கிளம்பும் முன்பாக என்னை தனியாக கூப்பிட்டு உங்களை காண்பித்து “அந்த நாயை சுட்டுத்தள்ளு (Kill the dog)” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு ரூபாய் 5000 தந்தார்.
புன்னகைத்த ஆனந்த் விருட்டென்று அவன் கையில் ரூபாய் 20000 தந்தான்.
எனக்கு எதுக்கு சார் பணம் தர்றீங்க ?
உனக்கு ரூபாய் 5000. உனக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த டீச்சருக்கு மீதி ரூபாய் 15000.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.