எழுதியவர்: பிரகதி நவநீதன்
சொல்: பீரங்கி
மூன்றாம் வகுப்பு படிக்கும் ராஜா தன் நண்பர்களுடன் பள்ளிக்கூடத்தில் பொருட் காட்சிக்கு அழைத்து சென்றார்கள். ஆசையுடன் சென்றான். அங்கிருந்த ராட்டினம் பஞ்சுமிட்டாய் ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி சாப்பிட அவன் அப்பா காசு கொடுத்து இருந்ததால் தன் நண்பர்களுக்கும் வாங்கி கொடுத்து தானும் சாப்பிட்டான்.
அவனுடன் வந்த அவனுடைய ஆசிரியர் அங்கு இருக்கும் எல்லாவற்றையும் பற்றி விளக்கிக் கொண்டே வந்தார். அப்போது அங்கே ஒரு பெரிய பீரங்கி இருந்தது.
“சார் இது என்ன?” என்று ஆசையுடன் கேட்டான் ராஜா.
“முன் காலத்தில் மன்னர்கள் போருக்கு போகும் போது இதற்குள் குண்டு வைத்து இதை தள்ளி கொண்டு செல்வார்கள் போரில் இதனை இயக்கி வெற்றி பெறுவார்கள்” என்று பீரங்கி உபயோகப்படுத்தும் விதத்தினை ஆசிரியர் நன்றாக அழகாக விளக்கி சொன்னார்.
புதிதாக ஒரு செய்தியை தெரிந்து கொண்டு ராஜா மிகவும் ஆர்முடன் வீட்டில் வந்தவுடன் தன் அண்ணா அம்மா அப்பா தாத்தா எல்லோரிடமும் பீரங்கி பற்றியும் அதன் பெருமையைப் பற்றியும் விளக்கி சொன்னான்.
“இவன் பொருட்காட்சிக்கு போவதால் என்ன பயன் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு நல்ல அருமையான சரித்திர தகவலை தெரிந்து கொண்டிருக்கிறான்” என்று ராஜாவின் அம்மா சுமதி அவனை பாராட்டினார்.
முற்றும்.
📍