எழுதியவர்: நந்தினி கிருஷ்ணன்
சொல்: ஊஞ்சல்
பசுமையும் வளமையும் நிறைந்த பூஞ்சோலை என்ற அந்த கிராமத்தில் கிராமத்தில், பெரிய ஆலமரத்துக்கு கீழ் ஊஞ்சல் கட்டி சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
அந்த ஊஞ்சல் அவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கும். பசுமையான புல்வெளியில், காற்றின் சலசலப்பு, பறவைகள் கூச்சலிடும் சத்தம் – இவை எல்லாம் ஊஞ்சல் ஆடும் தருணத்தில் குழந்தைகளின் மனதில் புதுமையாக நுழையும்.
ஊஞ்சலில் ஏறி உயர உயர பறக்கப் பிடித்த குழந்தைகள், நெஞ்சம் நிறைந்த சிரிப்புடன் தங்கள் சின்னஞ்சிறு கனவுகளையும் அலைபாயும் காற்றுடன் பறக்க விடுவர்.
அந்த ஊஞ்சல் அவர்கள் அனைவருக்கும் ஒரு விளையாட்டு மட்டுமல்ல கிராமத்து தேவதைகளாக அவர்களை நினைத்துக்கொண்டு அடுத்து வரவிருக்கும் நாட்களை எதிர் நோக்க வைக்கும் அற்புதமான ஒரு வழிகாட்டி.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.