எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: ஊஞ்சல்
கருவேலம்பட்டில்லாம் இறங்கிக்கங்க, கண்டக்டர் விசிலடிச்சு சொன்னார். சரவணன் தன் தோள் வழியும் பையுடன் பஸ்ஸை விட்டு இறங்கினான்.
18 வயசுல மிலிடரி செலக்ஷன்ல நின்னு தேர்வாகி பத்தே நாள்ல பாஷை தெரியாத ஊர்கள்.6 வருஷம் கழிச்சு திரும்ப இந்த குக்கிராமம் அம்மாவைப் பாக்க.
தார் ரோட்ல இருந்து பிரிஞ்சு போற ஒத்தையடிப் பாதை,அதோ மாயன் தோப்பு 16 வயசுல பழைய ஜீப் டயர்ல கட்டின ஊஞ்சல் 8 வருஷத்துக்கப்பறமும் இருக்கு.
பக்கத்துல போனான்.எங்கிருந்தோ ஓடி வந்த அவள்,”இது என் அத்தான் ஊஞ்சல், நீ போய் பஞ்சாயத்து பூங்கா ஊஞ்சல்ல ஆடிக்கோ”
சிரிச்சிட்டே,”அஞ்சலை யாரு உன் அத்தான்?”
“ஏய் என் பேர் எப்படித் தெரியும்? செல்லம்மா அத்தை பையானா நீ?”
துளிர்த்தது காதல், வளர்ந்தது விருட்சமாய்.ஒரு மாத விடுமுறை ஓடிப் போச்சே அஞ்சலை.
அவசர அழைப்பஉ ஶ்ரீநகரில் ஆதங்கவாதிகளின் கொட்டம் அடக்க.
எமனின் அழைப்பை சரவணன் தட்ட முடியலை.இங்கே நின்றுபோன ஊஞ்சலின் பக்கம் கண்ணீருடன் அஞ்சலை.
முற்றும்.