எழுதியவர்: அருள்மொழி மணவாளன்
சொல்: பீரங்கி
நவ யுகத்தில் எத்தனையோ ஆயுதங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்தில் மறைவாக இருந்து சரியா இலக்கை துளைத்து விடும் ரைப்ஃபில் துப்பாக்கிகள்.
எவ்வளவோ கிலோ மீட்டர் தூரத்திலிருந்து எதிரியின் நாட்டையே அழித்து விடக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகள். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இன்னும் எத்தனையோ அழிவிற்கான ஆயுதங்கள்.
தொலைக்காட்சியில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களையும், நாடுகளையும், மக்களையும் பார்க்கும் பொழுது, சம்பந்தமே இல்லாமல் நமக்கும் இதயத்தை ஒருவித வலி தோன்றுகிறது.
காலப் பயணத்தில் கொஞ்சம் முன்னே சென்று நம் நாட்டின் வரலாற்றை, திரைப்படங்கள் வாயிலாக பார்க்கும் பொழுதும்சரி, எழுத்துக்கள் மூலமாக படிக்கும் பொழுதும்சரி, நமக்குள் ஒரு வித வலி தோன்றாமல் இருப்பதில்லை.
நம் நாட்டின் எந்த ஊருக்கு சுற்றுலா சென்றாலும், அவ்வூரின் ராஜாவின் கோட்டையை பார்ப்போம். அங்கு வைத்திருக்கும் பீரங்கியின் முன் வருடமும் தேதியும் இட்டு, ஆங்கிலேயர்கள் இந்த பீரங்கி கொண்டு தான் கோட்டையை தகர்த்தார்கள் என்று எழுதி இருப்பதை பார்க்கும் பொழுது, ஏதோ இப்பொழுது தான் அந்நிகழ்ச்சி நடந்தது போல் கண்முன் தோன்றி நம் மனதிற்கு வலியை ஏற்படுத்துகிறது.
கனமான ஆயுதம்..
மனதை கனமாக்கும் ஆயுதம்..
பீரங்கி
முற்றும்.
