அரூபி தள வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்.
இதோ அடுத்த போட்டியோடு வந்து விட்டது அரூபி தளம் உங்களை நோக்கி அன்னையர் தினத்தை முன்னிட்டு.
அம்மா!
ஜனித்த கருவை உயிர்க்கூட்டில் வைத்து காத்திடும் ஓர் உயிர். ஆனால், இங்கு பலரும் சுமக்காதே தாய் ஸ்தானம் கொண்டிருக்கின்றனர்.
இது அப்படியானவர்களை மையப்படுத்திடும் ஒரு பக்க கதை போட்டியாகும்.
போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் படைப்பாளர்கள் ‘தாய்தான்’ என்ற கருவை முன்னிறுத்தி ஒரு பக்க கதையை படைத்திடலாம்.
காதல், குடும்பம், திகில், கிரைம் என்று எவ்வகையாகினும் அதில் ‘தாய்தான்’ என்ற கருவை திறம்பட வெளிக்கொணரும் ஒரு பக்க கதையே சிறந்த படைப்பாக கருதப்படும்.
ஆகவே, நச்சென்ற கருவோடு டக்கென ஒரு பக்க கதை ஒன்றை ரெடி செய்து இன்றே போட்டியில் கலந்துக்கொள்ள தயாராகுங்கள்.
1. போட்டி விதிமுறைகள்
* தள வேறுபாடோ அல்லது பாரபட்சமோ கிடையாது, விரும்பியவர்கள் யாராகினும் போட்டியில் கலந்துக்கொள்ளலாம்.
* ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரு பக்க கதைகளை எழுதிடலாம்.
* வார்த்தைகள்: 300 – 500 (குறையாமலும் மிகாமலும் இருந்திட வேண்டும்).
* ஒரு பக்க கதையை, 2022arubi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டும்.
* சிறுகதையை MS Word document (font Unicode 10 – 12) எழுதி மெயிலில் இணைத்திட வேண்டும்.
* மெயிலில் கீழ்கண்ட குறிப்புகளை தெளிவாக குறிப்பிடவும்.
எழுத்தாளர் பெயர்:
சிறுகதையின் தலைப்பு:
அலைப்பேசி எண்:
* போட்டி தொடங்கும் நாள்: 01.05.2024
* போட்டிக்கான சிறுகதைகளை சமர்பித்திடும் இறுதி நாள்: 26.05.2024
* தளத்தில் கதையை பதிவு செய்த பின் மாற்றங்கள் ஏதும் செய்திட இயலாது. முக்கியமான அவசியம் இருப்பின் மட்டுமே சம்பந்தப்பட்ட எழுத்தாளர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு தகுந்த காரணங்களை தெரியப்படுத்தினால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* ஆகவே, கதையை மெயில் செய்திடும் முன் சரிவர எல்லாவற்றையும் ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
* போட்டிக்காக பெறப்படும் ஒரு பக்க கதைகள் அனைத்தும் அரூபி தளத்தில் ‘போட்டிகள் – தாயுள்ளம்’ என்ற பகுதியில் 01.05.2024 தொடங்கி 26.05.2024 வரை பதிவிடப்படும்.
* ஒரு பக்க கதைக்கான திரியோ, அரூபி குழுமம் என்ற முகநூல் குரூப்பில் பதிவிடப்படும்.
* முதல் மூன்று சிறந்த ஒரு பக்க கதைகள் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படும்.
* அதிகமான பிழைகள் இருப்பின் சிறுகதை வெற்றி பெரும் வாய்ப்பை இழந்திடும். ஆகவே, ஒருமுறைக்கு இருமுறை கவனமாய் பிழைகளை திருத்திய பின் சிறுகதைகளை அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
* வெற்றி தோல்வியைத் தாண்டி, போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னும், போட்டிக்காக தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பக்க கதைகள் எதுவும் தளத்திலிருந்து நீக்கப்படாது.
* போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 01.06.2024 (திங்கட்கிழமை)
* போட்டியின் முடிவுகள் வெளிவரும் வரை போட்டிக்காக அனுப்பப்படும் படைப்புகளை வேறெந்த இடத்திலும் பதிவிடக்கூடாது. முடிவிற்கு பின், எழுத்தாளர்கள் விரும்பினால் அவர்களின் சிறுகதையை வேறிடத்தில் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.
* வெற்றி பெறுவோருக்கு வழக்கம் போல் பரிசு உண்டு.
* கலந்துக்கொண்ட அனைவருக்கும் டிஜிட்டல் நற்சான்றிதழ் வழங்கக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற அனைவருக்கும் அரூபி தளத்தின் வாழ்த்துக்கள்😁.
அரூபியின் போட்டிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க் : https://chat.whatsapp.com/HqGbMOfex8j9slatPNGqNy.
அரூபியின் சேனல் லிங்க் : https://whatsapp.com/channel/0029VaEaAjRDjiOhJOANyZ0N
அரூபி குழுமம் : https://www.facebook.com/groups/389335123995452/?ref=share&mibextid=KtfwRi
நன்றி. வணக்கம்.✌️
#amydeepz
#Arubi