கவிஞர்: ஜெ. வித்யா ரகோத்தமன்
எனக்காகவே என்றும் வாழ்பவள்…
எனக்குள் இருந்து ஒவ்வொரு நாளங்களையும் இயக்குபவள்…
செந்நிற பஞ்சு பட்டாம்பூச்சியார் நான் வாழ துடிப்பவள்…
தனை மறந்து, மன அழுத்தம், வேலை சுமைகளை விடுவிக்க,
வெண்சுருட்டை நாடி..
புகையை இழுத்து வெளியிடுகையில் அவளது ஆயுளும் சேர்ந்தல்லவா கரைகிறது…