ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: மா.கே 2

by admin 1
54 views

“மா.கே2, விண்வெளிக்கே உங்களை அழைத்துச் செல்லும் நீச்சல் குளம்”
என்ற பெரிய பேனர் பார்த்தப்பின் உள்ளே நுழையாமல் இருக்க
முடியவில்லை. உள்ளே நுழைந்ததும், சில கேள்விகள் கேட்டார்கள். பிறகு
பல நீச்சல் குளங்கள் நிறைந்த இடத்தில், என்னை மட்டும் தனி ஒரு நீச்சல்
குளத்தில் அனுப்பி வைத்தார்கள். முதல் நாள் என்பதால் இங்கே மட்டும்
தான் நீந்த வேண்டும் என்றும், அடுத்த நாள் முதல் சுற்றியிருக்கும்
ஒவ்வொரு குளத்திற்கு செல்லலாம் என்றும் சொன்னார்கள்.
என் நீச்சல் குளம் தேக்கி வைத்த ஆற்றுத் தண்ணீர் போல் குளிராக
இருந்தது. சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு இதமாக குளிர் தண்ணீர்
குளியல் என்று நினைத்துக் கொண்டேன். பத்து நிமிடத்திற்கு மேல்
தண்ணீரில் இருக்க முடியவில்லை, அவ்வளவு குளிர் பிடித்து விட்டது.
சுற்றி இருக்கும் ஒவ்வொருவரும் தண்ணீரில் மணிக்கணக்கில் இருந்தார்கள்.
காலில் நீந்தும் துடுப்பும் வேறு விதமான உடையும் அணிந்திருந்த ஒரே ஒரு வாலிபன் மட்டும் தனியாகத் தெரிந்தான். மற்றவர்கள், மேலாடை இல்லாமல் தான் தண்ணீரில் இறங்கினர் .
அரை நாள் முடிந்திருக்கும், இந்த நீச்சல் நமக்கு ஒத்து வராது, கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே உள்ளவர்கள் நீர்யானையைப் போல் தண்ணீரிலே வாழ்ந்து கொண்டிருந்தனர். வெளியில் செல்லும் வழியில் அந்த துடுப்பு அணிந்திருந்த வாலிபன் மட்டும் உணவு தின்பதை பார்த்தேன். சுமார் ஆயிரம் பேர் உள்ள இடத்தில், இவனுக்கு மட்டும் தான் பசிக்கிறது என்பது
ஆச்சரியம்.
வெளியில் செல்லலாம் என்று நினைத்த மனம் வழக்கம் போல் மாறியது.
எல்லா நீச்சல் குளமும் குளிரும் என்று அவசியமில்லையே, ஏன் முயலக்
கூடாது என்று நினைத்தேன். அந்த வாலிபன் இருந்த குளத்தில், நான்
மேலாடையை அவிழ்த்து விட்டு குதித்தேன்.

சுருக்கென்று ஒவ்வொரு அணுக்களும் குத்தின. அது பனி குளம். ரத்த ஓட்டம்
நின்று விடும் போல் இருந்தது. வெளியே கூட வர முடியாத அளவு
தண்ணீரில் மாட்டிக்கொண்டேன். இதற்கு நடுவில் அங்கே நான் கண்ட காட்சி
மூச்சை ஒரு நிமிடம் நிறுத்தியது.. என்னை சுற்றி இருந்தோர் மனிதனை
போல் வெளியில் தெரிந்தார்கள். தண்ணீரில் அனைவருக்கும் மீனை போல்
துடுப்பு முளைத்து, உடல் பச்சையாக மாறிவிட்டது.
என் நினைவு என்னை விட்டு செல்வதை உணர்ந்தேன். அந்த வாலிபன்
முகம் மட்டும் கண் அருகில் தென்பட்டது. சிறிது நேரம் நடந்தது எதுவும்
நினைவில்லை. ஆனால் நிலத்திற்கு வந்துவிட்டேன் என்பது தெளிவானது.
அந்த வாலிபன் மற்றவர்களிடம் எதோ சொல்லிக் கொண்டிருந்தான் “இவன் என்னைப் போல் மனிதன், மாகேமாகே கிரகதவன் அல்ல. பனி தண்ணீரில் குதித்திருக்கிறான், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் “ என்று அலறி கொண்டிருந்தான். .
“மா.கே2, விண்வெளிக்கே உங்களை அழைத்துச் செல்லும் நீச்சல் குளம்”
என்று நுழைவாயிலில் அவர்கள் கேட்ட கேள்விகள் “எந்த கிரகத்தை
சேர்ந்தவர் ?”, “உங்கள் ரத்தத்தின் நிறம் என்ன , சோதிக்கலாமா “ என்ற
கேள்விகளை நிராகரித்த நினைவுகள் வந்து போயின. உண்மையான
விண்வெளி கண்ணில் தெரிவது போல் இருந்தது.
குறிப்பு – மாகேமாகே என்பது ஐந்து குருங்கோள்களில் ஒன்று.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!