எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
“ அழாதே தம்பி அப்பா வருகிற நேரம்
கண்ணத் தொட ,அப்பாவுக்கு பிடிக்காதது தம்பி “ என்று மகனுக்கு ஆறுதல் கூறினாள் “ ஹேமா .
கரகரப்பு சத்தத்துடன் உள்ளே நுழையும் போதே அரைகண் பார்வையால் மகன் மணியை கவனித்தான் வசந்த்
“ உன் மகனுக்கு என்னவா பொம்பள பிள்ளை மாதிரி அழுகிறான் “என்றான் கணத்த குரலில் வசந்த்
“ நேத்து நடந்த விளையாட்டு போட்டியில தோத்துத்திட்டான்
அதுதான் “ என்றால் ஹேமா
“ மணி இங்க வாடா “ என்று மெல்லிய குரலில் அழைத்தான் வசந்த்
“ எல்லா நேரமும் பச்சை விளக்கு எரியாது ; அப்ப அப்ப சிகப்பு விளக்கு எரியும் சில நேரங்களில் மஞ்சள் நிறத்திலேயும் எரியும் “ என்றான் வசந்த்
“ , தம்பி சிக்னல் இருக்கிறப்ப எந்த விளக்குக்கு என்ன மாதிரி செயல்படுகிறோமோ
அது மாதிரி தான் வாழ்க்கை. “ என்றான் வசந்த்
“ சிகப்பு விளக்கு போட்டா நம் செயல்பாட்டை நிறுத்தி வைச்சிட்டு
பச்சை விழும் வரை காத்திருக்குனும்
ஏ! மஞ்சள் விளக்கு வந்தா மிக கவனமாக கவனசிச்சு செயல்படனும் அப்பதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும் “ என்றான் வசந்த்
“ வண்டி ஓட்டும் போது மட்டும இந்த ரூல வாழ்க்கையிலும் கடைப்பிடிச்சா நாம வெற்றி பாதை அடைய முடியும்
சரியா “என்றான் வசந்த்
மணிக்கு தெளிவு பிறந்த சந்தோஷத்தில் அப்பாவை
கட்டி பிடித்துக் கொண்டான் மணி
முற்றும்.