திகில் போட்டிக் கதை: அனுமானுஷ்யம்

by admin 2
60 views

மூச்சு வாங்கியது எனக்கு இருந்தாலும் நில்லாது ஓடினேன் நான். இப்படியெல்லாம் சொல்ல வேண்டும் என்று எனக்கும் ஆசை தான் ஆனால் என் கதையே வேற. சொல்றே கேளுங்க. நான் சொல்ற கதையக் கேட்டிங்கன்னா நீங்களே ஆச்சரியப்படுவீங்க. என் பேரு கன்னிக்கொடி. எங்க ஊரு சிதம்பரம் பக்கத்துல ஒரு கிராமம். கண்ணுக்குக் குளிர்ச்சியாய், பச்சைப்பசேலென்னு நெல் வயல்களோடும், நல்லக் காற்றோடும் தோப்பிற்கு நடுவே எங்க வீடு. வீடுகள் அங்கொன்னு, இங்கொன்னுமாய் இருக்கும். பொழுது சாஞ்சிட்டா தெருவுல ஈ,காக்காக் கூட இருக்காது.

இரவு சாப்பாட்டுக்கு எல்லாரும் தட்டோடு உட்கார்ந்திருந்தோம். அம்மா, அண்ணி லதாவ, என்னமா பண்ற வா சாப்பிடலாம் என்று கூப்பிட, அண்ணிக்கிட்ட இருந்து சத்தமே இல்லாதனால அம்மா என்ன போயி பாக்க சொன்னாங்க. அண்ணியோட அறைய தொறந்து பாத்தாவுடனே எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. என்ன முறச்சு பாத்த அண்ணியின் குரலில் வழக்கம் போல் மாற்றம்.

முகத்தில் பவுடர்பூசி, கண்ணுக்கு மையிட்டு அறையிலிருந்து வெளியில் வந்து பூ எங்க, பூ எங்க என்று கேட்க, என் அம்மா சாப்பாடு பரிமாறுவதை விட்டுவிட்டு; திரும்ப வந்துட்டியா? என்ன வேணும் உனக்கு என்று கேட்க பூ வேணும், சாப்பாடு வேணுமுன்னு கேட்டாங்க. எல்லாம் தரேன் தின்னுட்டு சத்தம் போடாம போயிடணும் சரியா என்றவுடன் டங்கென்று கீழே உக்காந்தாங்க. வேக வேகமா மூணு நாலு சீப்பு வாழப்பழத்தை ஒரே மூச்சுல சாப்ட்டு முடிச்சாங்க அண்ணி.

முடிச்சியா? எந்திரி போலாமுன்னு அம்மா கையைப்பிடிச்சு இழுத்துக்கிட்டு ,கையில டார்ச்சோடு வெளியில கூட்டிட்டு போனாங்க. ம்……போ, என்று முதுகில் ஓங்கித் தட்டியவுடன் டமாரென்று கீழ விழுந்த அண்ணியத் தாங்கிப் பிடிச்ச அம்மா; அணைச்சப்படியே வீட்டுக்குள்ள கூட்டியாந்து படுக்க வைச்சுடுவாங்க.
இது எல்லாத்தையும் எந்த பதட்டமும் இல்லாமல் வீடே அமைதியாகப் பாத்துக்கிட்டிருக்கும், அந்த கூட்டத்துல எனக்கு மட்டுமே மகிழ்ச்சியில மனசெல்லாம் அலபாஞ்சுக்கிட்டிருக்கும். ஏன்னா அம்மா உடனே வண்டிக்கட்டிக்கிட்டு பேய் ஓட்ட கோவிலுக்குக் கிளம்பிடுவாங்க. அண்ணி மாறி நெறைய ஆளுங்க வருவாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாறியா இருப்பாங்க. ஆனா நான் பயந்தது கிடையாது. அன்னைக்கு முழுசும் ஜாலியா இருக்கலாம். படிக்கத் தேவையில்ல, வீட்டில் வேலை செய்யத் தேவையில்ல. கோவில விட்டுக் கிளம்பும் போது மறுபடியும் எப்ப வருவோன்னு தான் தோணும். பாவ அண்ணி தான் கஷ்டப்படுவாங்க.

இரண்டு மூணு நாளைக்கு அவங்களால எந்திரிக்கவே முடியாது. அடிச்சுப்போட்ட மாறி தூங்குவாங்க.அவங்களுக்கும் என்னா நடந்ததுன்னே தெரியாது. அம்மா தான் ரொம்ப தைரியமா எல்லாத்தையும் சமாளிப்பாங்க அதனால் என்னவோ பயமே இல்லாமே ஆயிடுச்சு. என்ன பொறுத்தவரைக்கும் ஒருநாள் ஆட்டந்தான் மனசெல்லாம் ஓடும்.
ஏன்னா நாங்க விவசாய குடும்பங்கறதுனால இந்த சந்தர்ப்பத்த விட்டா நாங்க வெளியில போக மாட்டோம். இது எல்லாம் உண்மையா பொய்யான்னுக் கூட எனக்குத் தெரியாது. கிராமத்துல வளர்ந்தனால இந்த மாறி யாராவது சொன்னா இன்னமும் சிரிப்பா தான் வரும். என்னப் பொறுத்தவர திகில் எனக்குத் தித்திப்பே……

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!