எழுத்தாளர்: நா.பா.மீரா
மேரி சிஸ்டர் … அந்த ரூம் நம்பர்- 9 தாத்தா சரியான பிளேடு பார்ட்டி …. ஆள் கெடைச்சா போதும் …..தன்னோட அந்த காலத்துப் பெருமையெல்லாம் பேசி அறுத்துத் தள்ளிடுவார்… ஆனா நீங்க எப்படித்தான் ரொம்பப் பொறுமையா அவரைச் சமாளிக்கிறீங்களோ ?
புலம்பினாள் இளவயது நர்ஸ் ரோஸி.
ரோஸியைஏறிட்ட மேரி ….வயசாயிட்டாலே தங்களோட ஆளுமைத் தன்மை குறைஞ்சு ..தனிமைய உணர்ற இந்த மாதிரிப் பெரியவங்களுக்கு தேக்கி வைச்சிருக்கிற அவங்களோட உணர்வுகளைக் கொட்டுறதுக்கு நாம ஒரு வடிகால் அவ்வளவுதான்…நாளைக்கு வயசாயி ஓட்டம் …ஆட்டமெல்லாம் குறையறச்ச…ஒரு வேளை—நாமளும் இப்படித்தான் இருப்போமோ என்னவோ….என்றவாறு ரோஸியைத் தட்டிகொடுத்து நகர்ந்தாள் மேரி சிஸ்டர்.
நன்றி