படைப்பாளர்: பாத்திமா அம்னா
கன்னியா குமாரி எனும் ஊரில் வசிக்கும் மிகவும் ஏழை குடும்பத்தினை சேர்ந்த ரேணுகா எனும் பெண் பாடசாலை கல்வி மட்டத்தினால் நடத்திய பொது அறிவு வினா விடை போட்டியில் முதலாம் இடத்தை வென்றமைக்காக அவள் தேசிய மட்டத்தில் தேர்வாகி பல பாடசாலைகளுடன் போட்டி இட்டு தன் திறமையை வெளி காட்டி வெற்றி பெறுவதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை பாடசாலை சார்பாக வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. ” எனக் கூறிய அதிபரோ மேடையில் இருந்து கீழ் இறங்கி போய் தன் இடத்தில் போய் அமரவும், அவள் போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள், வாழ்த்து மடல்கள் மற்றும் பரிசுகள் போன்றவற்றினை வழங்கி அவளை கௌரவிக்கவும் இதை தன் நண்பிகளாகிய மாலா மற்றும் கவிதாவிடம் போய் தான் வென்றதன் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றாள்.
ரேணுகா :- ” ஹேய்! கவி, மாலு இங்கே பாரு. நான் ஜெயிச்சு விட்டேன். “என கூறியவாளோ, அவர்களை நோக்கி ஓடி வந்து தனக்கு கிடைத்த வாழ்த்து மடல், சான்றிதழ், பரிசுகளை காட்டியவளோ, ” இன்னைக்கு நான் எவ்வளவு ஹேப்பியாக இருக்கிறேன் தெரியுமா… அதுவும் எனக்கு இந்த முதல் நிலைக்கான பரிசு கிடைக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவே இல்லை. ” என ஒரு வித துள்ளலோடு மகிழ்ச்சியாக கூறுகிறாள்.
கவிதா :- ” ஐயோ! ரேனு நீ ஜெயிச்சுட்ட. ஐ அம் சோ ஹாப்பி. ” என கூறியவளோ, ரேணுவை அனைத்து, ” காங்கிராட்ஸ் டீ. என்ட் ஒல் த பெஸ்ட். ” என அவளை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறாள்.
ரேணுகா :- ” தேங்க்ஸ் கவி. ” என மகிழ்ச்சியாக சிரித்தவாறு கூறியவளோ, மனதினுள் ” ஐயோ! எனக்கு எப்போ ஸ்கூல் விடும். நான் எப்போ தான் வீட்டுக்கு போறது. ஆனால் டைம் அப்படியே இன்னும் இருக்கே. அதுவும் எனக்கு இந்த சந்தோஷத்தை எப்படியாவது உடனே அம்மாவிடம் சொல்லனும் போல இருக்கு. நான் போய் அவங்ககிட்ட சொன்னால் எவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அதோட பெருமையும் படுவாங்க. ” என நினைத்து சந்தோஷப்பட்டவளுக்கு தெரியவே இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல தன்னுடைய மொத்த சந்தோசமும் வந்த இடம் தெரியாமல் காணாமல் போக போகிறது என்று.
மாலா :- ரேணுவின் தலையில் ஒரு கொட்டு விட்டு, ” அடியேய்! ரேணு… நான் எவ்வளவு நேரமா உன்னை பேசிக் கொண்டு இருக்கிறேன். நீ கண்ணை திறந்து கொண்டே பட்ட பகலிலே கனவு காண தொடங்கி விட்டாயா. அம்மா தாயே! தயவு செஞ்சு கொஞ்ச நேரத்துக்கு கனவு காண்பதை நிறுத்தி விட்டு நான் சொல்வதை கேட்டு விட்டு அப்புறமாக கனவு காணு. ” என கூறவும், அவளும் ” என்ன… ” எனும் விதமாக அவளையே பார்க்க, அவளோ ” முதலில் இடை பிடித்து கொள்ளு. ” எனக் கூறி தன் கையில் இருந்த அவளுடைய வெற்றி சான்றிதழ், வாழ்த்து மடல் மற்றும் பரிசுகள் என்பவற்றை கொடுத்து விட்டு தன் பையில் இருந்து ஸ்டோபரி சொக்லேட்டை எடுத்து அவளிடம் ” இது என்னால் முடிந்த சின்ன கிப்ட் டீ. ” எனக் கூறி கொடுத்து விட்டு அவளை பார்த்து ” நீ எப்பவுமே இப்படி சிரித்துக் கொண்டு சந்தோசமாக இருக்கணும். அதோடு இனிமேல் நீ கலந்து கொள்கின்ற எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று இதே மாதிரி இன்னைக்கு பெற்ற அனைத்தையும் நீ பெற வேண்டும். ” என சந்தோசமாக கூறியவளோ, ” இன்னைக்கு நீ வெற்றி பெற்றதற்கு காங்கிராட்ஸ் டீ. அண்ட் ஆல் த பெஸ்ட். ” என கூறி வாழ்த்தவும் அவளோ மகிழ்ச்சியாக தன் நண்பியை கட்டி அணைத்துக் கொள்கிறாள்.
கவிதாவோ இவர்கள் இருவரும் கட்டி அனைத்து கொள்வதனைப் பார்த்து, ” அப்போ நான்.. ” எனக் கூறி தன் இதழை பிதுக்கியவாறு நிற்கவும், இருவரும் மாறி மாறி தங்கள் முகத்தை பார்த்து சிரித்தவர்களோ, அவளை தங்களை நோக்கி வரும் படி சைகை செய்து கையை நீட்டவும் ஓடி போய் அவர்களின் அனைப்பில் தானும் ஒருத்தியாக சந்தோசமாக இணைந்து கொள்கிறாள்.
மூன்று நண்பிகளும் மிகவும் சந்தோஷமாக இன்று பாடம் நடக்காது என்று தெரிந்ததும் ஒரு மேசையை இழுத்து போட்டு அதனை சுற்றி அமருமாறு கதிரைகள் போட்டு கதைத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியாமல் தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தவர்களோ, மணி அடிக்கும் வரை பாடசாலை விட்டது கூட தெரியாமல் இருந்தவர்களோ மணி ஓசை கேட்டதும் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களை பாடசாலை பையினால் அடுக்கியவாறு ஒவ்வொருவரும் பிரியா விடை கூறி, நாளை சந்திப்பதாக சொல்லி விட்டு போய் அவர்களுக்காக வந்து காத்துக் கொண்டு இருக்கும் வாகனங்களில் போகவும், ரேணுகாவோ ” தான் வெற்றி பெற்ற சந்தோசத்தை தனக்கு என சொல்ல இருக்கும் ஒரே உறவான தன் தாயிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்லப் போகிறோம். ” என்று சந்தோஷத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தவளுக்கு தன் மனதில் ஏதோ சொல்ல முடியாத படி வலி ஒன்று தோன்றவும் அது என்ன என்று சொல்ல தெரியாத பயத்துடனும் ஒரு வித தவிப்போடும் தன் வீட்டை நோக்கி பயணிக்கிறாள்.
தன் வீட்டை நோக்கி சென்றவளுக்கு ஏதோ வித்தியாசமாக படவுமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவசரமாக தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடியவளோ, தன் வீட்டின் முன் ஒரே சல சலப்பாக இருக்கவும், ஒரு வித பதட்டத்துடன் உற்று நோக்கியவளோ அங்கு இருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போய் விடுகிறாள்.
ரேணுகா அதிர்ந்ததற்கான காரணம் எப்பவுமே தன் வீட்டிற்கு வராத உறவுகள் தன் தந்தையின் இறப்புக்கு பின் தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் அவர்களிடம் போய் பணம் கேட்டு விடுவோமோ, இல்லை என்றால் இவர்களின் மொத்த பாரமும் தன் தலையில் விழுந்து விடுமோ, என பயந்து ஒவ்வொருவரும் இல்லாத ஒவ்வொரு காரணமாக தேடிக் கூறி விட்டு கழட்டி விட்டுட்டு சென்றவர்களோ, நடு வீதியில் எந்த வித துணையும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கும் போது கூட தங்களை திரும்பிக் கூட பார்க்காமல் கொஞ்சமும் இரக்கம் கூட இல்லாமல் விட்டு சென்றவர்கள் தங்கள் விட்டு முன்னால் இருக்கிறார்களா. அதுவும் ஏன்….? என எண்ணியவளோ, தன் கண்களால் பார்த்து கூட நம்ப முடியாமல் ” இவர்கள் எதுக்கு இப்போ இங்கே வந்து இருக்காங்க. இவ்வளவு நாளும் வராதவங்க இன்னைக்கு எதுக்கு இங்கே வரணும். அதுவும் அதற்கான அவசியம் அப்படி என்ன தான் இவர்களுக்கு வந்தது. ” என எண்ணியவளோ, ” என் அம்மா என்னை பார்த்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சட்டிப் பானை கழுவியும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஆடைகள் தைத்துக் கொடுத்து அல்லவா என்னை பார்த்து கொண்டாங்க. அந்த நேரம் கூட வராதவங்க இப்போ எதுக்கு வந்து இருக்கிறாங்க. அதுவும் இந்த அம்மாக்கு என்ன தான் ஆச்சோ தெரியல. இவங்க எல்லோரையும் வர விட்டு வீட்டுக்கு உள்ளே சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ” என கோபமாக வீட்டை நோக்கி சென்றவளோ, அவர்கள் எல்லோரும் தன்னை பரிதவிப்புடன் பாவமாக பார்ப்பதை கண்டு குழம்பியவளாக தன் வீட்டிற்குள் சென்றவளோ, எல்லோரும் நடு வீட்டில் கூடி இருப்பதை பார்த்து அவர்களுக்கு இடையே புகுந்து போய் எட்டிப் பார்த்தவளுக்கு தன் உலகமே தலை கீழாக சுழன்று, கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வரவும், தன் இதயத்தை யாரோ பலமாக ஆணியை வைத்து அடிப்பது போல் வலி எடுக்கவும் அதற்கு மேல் தாங்க முடியாமல் பாரமான மனதுடன் மெதுவாக முன்னோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து சென்றவளோ, அங்கே கண்ணாடி பெட்டியினுள் வைத்து இருந்த தன் தாயைப் பார்த்து மெதுவாக, ” அம்மா உனக்கு என்ன ஆச்சு. ஏன் இப்படி இருக்க. ” என பித்து பிடித்தது போல ஒரே கேள்வி கேட்கவும், அவளின் பக்கத்து வீட்டுப் பாட்டியோ மனம் கேட்காமல் அவளின் அருகில் வந்து, ” அம்மா தாயே இங்கே பாருடா… ” எனக் கூறியும் திரும்பி பார்க்காமல் பித்து பிடித்தவள் போல இருக்கவும், அதை பார்த்து தாங்க முடியாத அவரோ அவளை உலுக்கி, ” உன் அம்மா இந்த உலகில் வாழ்ந்தது போதும் என்று எல்லோரையும் விட்டுக் கடவுளிடம் போய் விட்டாங்க. ” எனக் கூறவும், அதை தாங்க முடியாத அவளோ தன் கண்களில் கண்ணீர் வடிய, ” இல்ல… என் அம்மா என்னை விட்டுட்டு எங்கேயும் தனியாக போக மாட்டங்க. ” என கத்திக் கதறி அழுதவளோ, மன அழுத்தம் தாங்க முடியாமல் மயங்கி விழவும் அவளை ஓடிப் போய் பிடித்தது அவளின் அக்கத்து பக்கத்து வீட்டில் இருந்து வந்தவர்கள் தான்.
ரேணுகாவின் வீட்டுக்கு வந்து இருந்த அவர்களின் உறவினர்கள் கூட, யாருக்கு வந்த விருந்தோ எனும் விதமாக ஒதுங்கி நின்றவர்களுக்கு பயம் இவளை தன் தலையில் கட்டி விடுவார்கள் என்று. அதனாலே எவ்வளவு இயலுமோ அவ்வளவு அவளை விட்டு ஒதுங்கி தான் நின்றார்கள். இவர்கள் இப்படி ஒதுங்கி நிற்பதைப் பார்த்து அக்கத்து பக்கத்தினர் சிலர் தான் இவளுடைய மயக்கத்தை தெளிய வைக்க, மயக்கத்தில் இருந்து எழுந்தவளோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் முளித்தவளுக்கு இவ்வளவு நேரம் இங்கு என்ன நடக்கிறது என்று ஞாபகம் வரவும், தன் கன்னத்தில் கண்ணீர் வழிய தன் தாயை உற்றுப் பார்த்தவளோ, கதறி அழுந்தவாறு அவரைப் பார்த்து, ” யேன் ம்மா.. என்னை மட்டும் இந்த உலகத்தில் தனியாக விட்டுட்டு போனாய். என்னையும் உன் கூட கூட்டிக் கொண்டு போய் இருக்கலாமே. இங்கே எனக்கு என்று யாருமா இருக்காங்க. இவ்வளவு நாளாக எனக்கு நீ இருந்தாய். ஆனால் நீ இப்போ என்னை மட்டும் தனியாக தவிக்க விட்டுட்டு யேன்மா போனாய். ” என கூறி கதறி அழுகவும், அவளை சுற்றி இருந்தவர்களும் கண்கள் கலங்கி போய் அவளை தான் பார்த்து கொண்டு இருக்கவும், திடீர் என்று தன் அழுகையை நிறுத்தி விட்டு சுற்றி முற்றி தேடியவளுக்கு தன் பாடசாலை பை ஒரு ஓரத்தில் தன்னை போல் அனாதையாக இருப்பதை கண்டு ஓடி போய் அதை எடுத்துக் கொண்டு வந்தவளோ தன் பையை திறந்து அதில் இருந்து தான் காலையில் பெற்ற வெற்றி சான்றிதழ், வாழ்த்து மடல், பரிசு என அனைத்தையும் வெளியே எடுத்தவளோ தன் தாயைப் பார்த்து, ” அம்மா எழும்பி வந்து இங்க பாருமா. நான் இன்னைக்கு பாடசாலை கல்வி மட்டத்தில் நடந்த பொது அறிவு வினா விடை போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை எடுத்து விட்டதாக கூறி, இதை எல்லாம் தந்தாங்கங்க ம்மா. அதோட தேசிய மட்டத்தில் நடை பெற போகிற போட்டியில் கூட நான் தேர்வாகி இருகின்றேன் ம்மா. ப்ளீஸ் மா எழும்பி வந்து ஏதாவது சொல்லுமா. உன் பொண்ணு வெற்றி அடைந்து விட்டு வந்திருக்கா. வா ம்மா.. ” எனக் கூறி கேவி கேவி கதறி அழவும், சுற்றி இருந்தவர்கள் கூட அவள் நிலையினை பார்த்து அழ தொடங்குகிறார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து அவரை தகனம் செய்வதற்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா! என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லாமல் எல்லோரும் அந்த இடத்தை விட்டு அகன்று இருக்கவும், அங்கு இருந்தவர்கள் தான் அவளின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு அவளின் அம்மாவுடைய இறுதி சடங்கை எல்லோரும் சேர்ந்து அவளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி சடங்கை செய்து முடித்தவர்களோ, அவளின் கையினாலே அவரைப் பற்ற வைத்து தகனம் அடைய செய்யாவும் தாங்க முடியாமல் ” அம்மா… அம்மா… ” எனக் கதறி அழுந்தவளோ தன் உடம்பில் தெம்பு இல்லாமல் தன் கண்களில் கண்ணீர் வழிய தன் தாய் கருகி சாம்பல் ஆகும் வரை பார்த்துக் கொண்டு இருக்கவும், வந்து இருந்த அக்கத்து பக்கத்தினர் சிலரும் தனக்கு எதுக்கு வீண் வம்பு என ஒதுங்கி சென்று விடவும், அங்கு இருந்த சில பேர் தான் அவளை கஷ்டப்பட்டு கட்டாயப்படுத்தி அந்த இடத்தை விட்டு அழைத்து சென்று குளிக்க வைத்து அவள் தனியாக இருந்தால் அழுந்து அழுந்து பைத்தியம் ஏதாவது பிடித்து விடுமோ… என பயந்து அவளை ஹோஸ்டல் ஒன்றில் சேர்த்து விட்டு விட, அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் தன் தாயை மட்டுமே எல்லா விஷயத்திலும் அவளுக்கு ஞாபகம் வரவும் தன் அறைக்கு சென்று கட்டிலுக்கு கீழே உட்கார்ந்து தன் அம்மாவின் போட்டோவை கட்டி அணைத்துக் கொண்டு கதறி ஏங்கி ஏங்கி அழுந்து தீர்க்கவும் அவளின் வலியை கேட்டு ஆறுதல் கூற கூட யாருமே இல்லாமல் அனாதையாக ஒவ்வொரு நாளும் கண்களில் கண்ணீர் வழிய, தன் தாயை இழந்த கவலைகளுடனே தன் நாட்களை கழிக்கிறாள்.
முற்றும்.