வானவில்லின் ஓவியம் வண்ணமயம்,
காற்றில் பறக்கும் பட்டம் வண்ணமயம்.
பூக்களின் முகம் மலர்ந்து வண்ணமயம்,
சிறுவனின் கை வரைந்த கோலம் வண்ணமயம்.
பச்சைப் புல்வெளி, நீல வானம்,
சிவப்பு ரோஜா, மஞ்சள் சூரியன்.
எல்லாம் ஒன்றாய் கலந்து,
உலகம் வண்ணமயமாகும்.
ஆதூரி யாழ்..