எழுதியவர்: உஷாமுத்துராமன்
சொல்: சீப்பு
“அகிலா….அகிலா….” என்று தன் பேத்தியை 80 வயது பாட்டி பார்வதி அம்மாள் அழைத்தாள். எட்டாம் வகுப்பு படிக்கும் அகிலா “என்ன பாட்டி வேணும்?” என்று கேட்டுக்கொண்டே வந்தவளிடம் “என் தலையை வாரி பின்னிக் கொள்ள வேண்டும். ஒரு சீப்பு எடுத்து வா” என்று சொன்னார்.
அகிலா உடனே ஒரு சீப்பைப) எடுத்துக் கொண்டு ஓடும்போது அவளுடைய அம்மா சீதா கூப்பிட்டு “அகிலா அது என்னுடைய சீப்பு அதை எடுத்துக்கொண்டு போகாதே. பாட்டிக்கு என்று தனியாக ஒரு சீப்பு இருக்கிறது பார் அதை கொடு’ என்று பார்ட்டியின் சீப்பை எடுத்துக் கொடுத்தார்.
“எந்த சீப்பாக இருந்தால் என்ன அம்மா நாம் தலையை வாரிக் கொள்ள வேண்டும் அதுதானே?” என்று கேட்டதற்கு “நாம் சீப்பு சோப்பு பிரஷ் டவல் போன்றவை எல்லாம் தனித்தனியாக வைத்துக் கொள்வது தான் ஆரோக்கியம் அதுவே நம்முடைய ஆரோக்கியத்தின் முதல் படி. இதை நீ முதலில் கற்றுக் கொள். அடுத்தவர் பொருட்களை உபயோகிக்கும் போது அவர்களுக்கும் பிடிக்காது நமக்கும் பிடிக்காது அதனால் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை கவனம் செலுத்தினாலே நம்முடைய ஆரோக்கியம் நம்மிடமே இருக்கும்” என்று அம்மா அறிவுரை சொல்ல அதை புரிந்து கொண்ட அகிலா பாட்டியின் சீப்பை வாங்கிக் கொண்டு ஓடி சென்று பாட்டியிடம் கொடுத்தாள்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.