ஒன்றாயிரண்டா ….
என்னைவிட்டா உனக்கு வேராறு கிடைப்பா….
நீயில்லாம என்னால எதுவும் முடியாதோ…..
நானா இருக்க உங்கூட இருக்கேன்…
உன்னயெல்லாம் எங்க வைக்கனுமோ அங்கவைக்கனும்…
சொல்லறதயெல்லாம் செய்யறேன்பாரு எனய சொல்லனும்..
நானும் நீயும் மாறிமாறி கூறும்
இந்த ஊடல் வாக்கியங்கள் ஒன்றாயிரண்டா
இவ்வூடல் வார்தையெல்லாய் முற்றிடும் நம்கூடலில்….
-மித்ரா சுதீன்