படம் பார்த்து கவி: பொன்னிற

by admin 3
23 views

பொன்னிற காதல் தேவதை கனவில்
என்னுள் கிளர்த்திய காதல் நினைவில்
வானில் பறக்கும் அதிசயம் நிகழ்வில்
நானும் சேர்ந்து பறக்கும் விருப்பில்
தொடரும் கனவில் கிட்டாக் கனியாய்
இடரும் இடைவெளி குறையா நிலையாய்
படரும் வேட்கை காதல் நோயாய்
சுடராய் நம்பிக்கை மட்டும் இயல்பாய்
அழகில் மயங்கிய மனதுடன் பயணம்
பழகிக் கூட விழையும் தருணம்
உழலும் கனவு நனவாகும் வண்ணம்
எழிலாய் ஈடேறும் இலட்சியம் திண்ணம்

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!