சங்கிலியாய் தொடரும்
நினைவுகளோடு
தொடரும் பயணம் …
பரந்த வெளியில் முன்னேறும் பயணத்தில்
பசுமை மரங்களின் பின்தங்கும்
அணிவகுப்பு
சீறும் சத்தத்துடன் புறப்படும் போது
மிதமானப் புகையோடு நகரும் பயணம்
நீண்ட தடத்தில் நீளும் பாதையில்
அசைந்தாடும் உன் அழகில்
மனதில் உருவாகும் ஒரு கவிதை
சீரான தடத்தில்
உறுதியான நடையோடு
இலக்கை அடைவது எளிது
முகில் மிதக்க பயணிக்கும்
உன் வழி நெடுகிலும்
இருக்கும் இரயில் சிநேகங்கள்
விழியில் வருத்தம்
மனதில் சோகம்
முடிந்தது இந்தப் பயணம்
அடுத்த வண்டிப் பயணம் …
தொடரும்…
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: சங்கிலியாய்
previous post