மஞ்சள் உடலோடு கருத்த தலையோடு…
மேடையேறி மைக் பிடித்தாய் பாட்டுக்காக!
சின்னக் கொசு ஒன்று தீண்டியது உன் உடலை,
சட்டென்று ஒரு கேள்வி என் மனதில் எழும்பியது.
“ஏ மஞ்சள் சிட்டே, இந்த ஓசை உன் பாடலா?
இல்லை கொசு கடித்ததனால் வந்த துடிப்பின் செயலா?”
சிரித்தது சிட்டுக்குருவி சின்ன அலகு திறந்து,
“கொசு கடித்தாலும் நான் பாடுவேன் ஆனந்த கீதம் தொடர்ந்து!”
உண்மையிலேயே பாடும் அந்த மஞ்சள் சிட்டு,
இன்ப கீதம் இசைப்பது கேட்க இனிமை நமக்கு!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: மஞ்சள்
previous post