மக்கள் தொகை பெருகிடுச்சு
இருக்க இடம் சுருங்கிடுச்சு
காடு கலணி குளம் எல்லாம்
அடுக்கு மாடி வீடாச்சு
எட்டு மேலே எட்டு வைச்சு
மாடிப்படி ஏறி வந்தா
மூச்ச டைச்சு போகுன்னு
அழுங்காம குழுங்காம
மூச்சு இறைச்சி வேர்க்காம
ஒய்யாரமா உயரம் போகும்
மயில் வாகனம் இது
எட்டு மேல எட்டு வைச்சு
ஏணிப்படி ஏறி வந்தா
தேகம் எல்லாம் திடமாகும்
வாழ்க்கை இன்ப வளமாகும்
உடல் ஏதும் அலுக்காம
திரி லோக சொர்க்கம்
அழைத்து செல்லும்
புஸ்பகவிமானம் இது
சர் கணேஷ்