சிகப்பு நிற , எழுப்புங்கடிகாரம்
நேரம் சொல்லும் சத்தமாய்…
‘டிங்… டிங்… ‘ என ஒலிக்கும் ஓசையிலே,
துயில் கலைப்பது இவன் கடமையே…
காலைப் பொழுதின் பரபரப்பு இவனிடமே தொடங்கும்…
நேரத்தின் மதிப்பு இவனை அணைக்கும் போதே தெரியும்;
மீண்டும் உறங்கும் வேளையில்!
புதிய பழக்கங்களுக்கு இவனே உற்ற நண்பன்;
மூளையைப் பழக்கிவிட்டால்,
இவன் வேலையும் மெதுவாய்க் குறையும்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சிகப்பு
previous post