சக்கரத்தின் மையத்தில்,
களிமண் உயிர் பெறுகிறது.
விரல்களின் நுனியில்,
சிற்பியின் கனவு விரிகிறது.
காய்ந்த கைகள்,
ஈரமண்ணில் உயிர் பிசைகின்றன.
சுருங்கிய தோலின் மடிப்புகளில்,
கலையின் ஆழம் தெரிகிறது.
சிறு குவளை பிறக்கிறது,
உருப்பெற்ற உணர்வுகளுடன்.
மௌனமாய் பேசுகிறது,
தலைமுறைகளின் கைவினை.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: சக்கரத்தின்
previous post