மண்ணின் மைந்தர்கள் நாம் என்ன
தெரியும் நமக்கு இந்த மண்ணின்
மகத்துவம் குறித்தே ?
மண்ணைத் தொட்டு பக்தியுடன்
வணங்குதலும் உண்டு….பிடி மண் கொண்டே
தூற்றி சாபமிட்டு வசைபாடுவதும் உண்டு…
ஆனால் மண்ணே….நீ எங்கே போனாய்
உன்னில் மனிதர்கள் புதைவது போய்
உன்னையே புதைத்துவிட்டனரோ?
தேடியே தவிக்கிறேன் கான்கிரீட் தளங்கள்
புதைத்திட்ட நின் சுவடுகளை…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மண்ணின்
previous post