பச்சை பசேலென அடர்ந்து வளர்ந்து
பரந்து விரிந்த மரம் செடிகளும்
பழமும் காயும் பறிக்க வரும்
பலவகை பறவை விலங்கின் இனங்களும்
குளங்களும் மலைகளும் நிறைந்த நிலங்களும்
வளமையும் செழுமையும் வழங்கின இடங்களும்
தடங்கலே இல்லாமல் தரைமட்டமாக்கி விட்ட
தளங்களில் தானிந்த வானுயர்ந்த கட்டிடங்கள்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: பச்சை
previous post