பச்சை வாழை இலை விரித்து, அசைவ விருந்து படைத்து,
பார்வையிலே பரவசம் பொங்க, பலவித உணவு சேர்த்து!
நுகர்ந்தாலே
நாவூற வைக்கும் நறுமண விருந்து இது,
வெள்ளை வெளேரென சோறும், பொன்னிறக் குழம்பும் பார்…
பிரியாணி மணக்க மணக்க, மசாலா உருண்டை கூடவே,
மீன் வறுவலின் மொறுமொறுப்பும், அவித்த முட்டையின் அழகும்…
வெங்காயப் பச்சடியின் வாசம் மனதை மயக்கிடுமே,
சுவைத்திடத் தூண்டும் இந்த விருந்து, பசி போக்கிடுமே…
தமிழர் பண்பாட்டின் உன்னதக் காட்சி இது,
விருந்தோம்பல் கலையின் இனிய வெளிப்பாடு!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி; பச்சை
previous post