வெண்மைக் கற்களின் மின்னல் சுவரெங்கும் விரிய…
பச்சைப்பசேல் தாவரங்கள் உயிர்ப்புடன் மிளிர…
இயற்கை ஒளி பாயும் சாளரங்கள் கண்களுக்கு
இதம் சேர்க்க..
இது நவீன சமையலறையின் எழில்மிகு காட்சி!..
பாத்திரங்களும் சமையல் பொருட்களும் மறைவாய் ஒடுங்க…
நேர்த்தியும் சுத்தமும் இங்கே பேரழகு கூட்டும்…
தொங்கிக் கொண்டிருக்கும் மின்விளக்குகள் கலைப்படைப்பாய் ஜொலிக்க…
புகைபோக்கும் சிம்னியும் நவீனத்தின் அடையாளமாய் நிலைக்கும்…
சுவைமிகு உணவின் உறைவிடமாய், மனதிற்கு அமைதி தரும்…
ஒவ்வொரு நாளும்
புத்துணர்ச்சி பொங்கும்
புதிய இல்லம் இது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வெண்மை
previous post