வானவில் தன் வண்ணத்தை
வாரி கொடுத்தது போல்
வாசலில் வண்ணப் பூந்தொட்டியில்
கொத்தாய் கெத்தாய் மலர்ந்தது
பல வண்ண ரோஜா.
செம்மை காட்சியின் வண்ணம்..
செந்தழல் பரப்பும் காதல்…
செவ்விதழ் ஓரங்களில் காமம்…
பன்னீர் பூக்களின் கனவுகள்
ஒவ்வொரு இதழின் மனநிலை…
முத்தம், சினம், சிரிப்பு, ஆசை, அமைதி, மகிழ்ச்சிப் பூத்திடும்
காற்றிலும், மழையினிலும்
மணம் கொண்டு மனம் பேசும் மௌனக் கவி வண்ண ரோஜா
கண்ணோரம் காய்ந்த கண்ணீராய்
ரோஜாவை அழகாக்கும் பனிநீர் ரோஜா வாழ்வின் வண்ண வண்ணத்துப்பூச்சி
நா.பத்மாவதி
கொரட்டூர்