என்னவளுக்காக தூது விடவா…
மேகதூதும் பாடி வரவா…
காளிதாசன் சொன்ன வரியில்…
நானும் மாறி காதல் சொல்லவா…
பகலும் இரவாய் மாறி
செல்லுமே…
அவள் அருகில் இருக்கும்
நேரம் சொர்க்கமே…
கார் முகிலும் சூழ்ந்து கொள்ள…
மலையின் உச்சியில்
மகுடம் சூட…
பெயலின் வருகை தேகம் நினைக்க…
அவள் நினைவின் வருகை நெஞ்சை அணைக்க…
பாரிஜாதம் போல மலரவா…
அனிச்சம் போல நானும் வாடவா…
சொல்லி அனுப்பு என் தூதுக்கு பதிலை…
இல்லையென்றால்
நான் ஏக்கத்தில்
மதலை.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: என்னவளுக்காக
previous post