கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: காதல் காதல் தானே

by admin 2
79 views

எழுதியவர்: அனுஷா டேவிட்

கேள்வி 2: பொன்னியின் செல்வனை ரசிக்காத மனிதனில்லை. அந்த காலகட்டத்தில் ஆதித்த கரிகாலன் செய்த தவறு தான் என்ன? அவனுக்கு ஏன் அந்த நிலை வர வேண்டும்? கரிகாலனும் நந்தினியையும் சேர்த்து வைத்திருக்கலாமே? காதல் யார் மீது வந்தாலென்ன காதல் காதல் தானே?

காரணம் : நான் அதிகம் ரசித்த மற்றும் முதன் முதலாக வாசித்த நூல் தான் பொன்னியின் செல்வன். எத்தனையோ நிகழ்வுகளை கல்கி தன் எழுத்தெனும் உளி கொண்டு உணர்வுகளை செதுக்கி இருப்பார். ஆனால் கரிகாலனின் முடிவை வாசிக்கும் போது அப்படியொரு மன பாரமேறிய உணர்வுவோடு நிற்காமல் வழியும் கண் உவர் நீரை கட்டுபடுத்த முடியவே இல்லை என்னால். இந்த காதல் கை கூடி இருந்தால் வரலாறு எங்ஙனம் மாறியிருக்கும் ?  வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்திருக்குமே.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!