படம் பார்த்து கவி: பூட்டது

by admin 3
47 views

பூட்டது பூட்டியிருக்கையிலே கதவதுவும் திறவாதே
திறவுகோல் திறந்துவிடில் கடவொன்று கிடைத்திடுமே
கிடைத்திட்ட புதுக்கடவினிலே புத்துலகை காணலாகுமே
காணாத காட்சியினை கண்டிடவே காத்திருந்தேன்
காத்திருந்த காரணத்தால் கதவதுவும் திறந்திடுமோ
திறவுகோலிலா  பூட்டதனால் மனக்கதவினையே அடைத்துவிடில்
அடைத்துவைத்த  அன்பெலாமும் அமிழ்ந்தமிழ்ந்தே அழிந்திடுமே
அழிந்துவிடும் முன்னதாக மனமுவந்தே திறந்துவிடில்
திறம்படவே 
திளைத்திடலாம் திவ்விய அனபினிலே….

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!