கைக்குள் வெண்ணிலா
இரவு வானில் தவழும் வெண்ணிலவே
மேற்கே தொலைந்த ஆதவன் விட்டுச்சென்ற
கதிர்களின் வெம்மை தாக்கியதோ அன்றி
எவரும் அறியா வண்ணம் கடலில் குதித்து
பூமித் தாயவள் கைகளில் ஏந்தியே நீராடல்
நடத்தினயோ? கையில் பந்து போல் தவழும்
நின்னைக் காண கண் கோடி
வேண்டுமடி இருள்போக்கிட வந்த தேவதையே!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: கைக்குள்
previous post