அழகான மாலை நேரத்திலே,
வானம் செம்மஞ்சள் நிறத்தில், சூரியன் மறையும் வேளையிலே.
திறந்தவெளி புல்வெளியில், பூக்கள் நிறைந்திட,
கண்கவர் காட்சி அது, மனதில் பதிந்திட.
கரடியின் உருவம், சூரிய ஒளியிலே,
இயற்கையின் அழகு, அதில் ஒன்றிட.
மாலை நேரத்தின் அமைதி, எங்கும் சூழ்ந்திட,
இதோ ஒரு கரடி, கம்பீர நடைபோட,
பொன்னிற மாலை, வானில் ஒளி வீச.
புல்வெளியில் பூக்கள், கூட்டமாய் மலர்ந்திட,
அழகிய தோற்றம், எங்கும் நிறைந்திட.
சூரியன் மறைய, மஞ்சள் நிறம் சேர,
இயற்கை அன்னையின் ஓவியம் இங்கே.
கரடியின் நிழல், மெல்ல நீண்டிட,
அமைதியின் அழகு, எங்கும் நிலைத்திட.
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: அழகான
previous post