திகில் போட்டிக் கதை:  திகில் சாம்ராஜ்யம்

by admin 1
90 views

மூச்சு வாங்கியது எனக்கு.இருந்தும்,நில்லாது ஓடினேன் நான். பின்னாலயே எதுவோ துரத்திட்டு வர மாதிரி அந்த படபடப்பு நெஞ்சை அடைத்தது.எங்கேயவது உக்காந்தா தேவலை போல இருந்தது.பொதுவா இருட்டுல பயப்படுவாங்க,ஆனா இப்படி தெருவெல்லாம் ஒரே வெளிச்சம்,ஆள் நடமாட்டம்தான் சுத்தமா இல்லை.

எங்கோ இருந்து வரும் ‘வீல்’னு ஒரு பெண்ணின் சத்தம், டப்,டப்னு நடைமேடையில் ஒலிக்கும் கனத்த போலீஸ் பூட் சத்தம், கார் சக்கரத்தில் மாட்டி உயிர் போவது போல பூனை ஒன்றின் அகோர அலறல்.நிசப்தமான இரவை கிழித்துக் கொண்டு அவ்வப்போது அருகில் உள்ள ஃபுட்பால் ஸ்டேடியத்திலிருந்து வரும் பெரும் கூச்சல்.வெம்ப்ளி சென்ட்ரல் ஸ்டேஷன் வரதுக்குள்ளே இந்த குளிர் பிரதேசத்திலும் என் லெதர் ஜாக்கெட்டுக்குள் வேர்வை வெள்ளமாய் ஊற்றியது.

எங்கே போகணும்னு இன்ஸ்ட்ரக்‌ஷன் வரும் அங்கே போனவுடனேதான் தெரியும் அடுத்து என்னனு..இதெல்லாம யார் உத்தரவு போடறானு எனக்குத் தெரியாது..என் மொபைல்ல வர உத்தரவுகளை யோசிக்காம பின் தொடரறேன்.வெம்ப்ளி சென்ட்ரல் ஸ்டேஷன் அரைமணி

நேரத்துல போ ன்னது ஃபோன், வந்தாச்சு.அடுத்த மெசேஜ் வெம்ப்ளியிலிருந்து பேக்கர்லூ லைன் ட்யூப் டிரெயின் பிடி பேடிங்டன்ல இறங்கு.,பேடிங்டன் வந்தவுடனே,அடுத்த மெசேஜ் அங்கே இருந்து எலிசெபத் லைன் பிடிச்சுசவுத்ஹால் போ.சரினு எங்கல்லாம் ஃபோன் சொல்லுதோ அங்கேஎல்லாம் போறேன்.லண்டன் ஆய்ஸ்டர் கார்ட் இருக்கு

(இது ஒரு பிரி பெய்ட் பாஸ்) பஸ்,ஓவர்ஹெட்டிரெயின்,ட்யூப் டிரெயின்.எல்லாத்துலயும் உபயோகிக்கலாம்.எனக்கு உள்ள பதட்டம்,பயத்துல உங்களுக்கு புரியாம ஏதோசொல்றேன் இல்லை?முதல்ல இருந்து சொன்னாதான் புரியும்.ஆறு மாசத்துக்கு முன்னால லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்லஇறங்கறப்ப நிலை கொள்ளாத சந்தோஷம்.நினைச்சுக் கூட பாத்ததில்லை நாமல்லாம் லண்டன் வரைவருவோம்னு.ஸ்டெல்லா மேரீஸ்ல பி.எஸ்.சி படிச்சிட்டுஏதாவது போட்டிப் பரிட்சை எழுதி கவர்ன்மென்ட் உத்யோகமோ,இல்லைன்னா பி.எட் படிச்சு டீச்சர் வேலையோ பாக்கணும்ன்றஅளவுதான் ஆசைகளெல்லாம்.விளையாட்டா எழுதின ஏதோ ஒரு போட்டிப் பரிட்சையில் லண்டன் பிரின்ஸ் காலேஜில்உதவித் தொகையுடன் மேற் படிப்பு படிக்கும் வாய்ப்பு இந்தஏழை எஸ்தர் நாகராஜுக்கும் கிடைத்தது.

லஸ் தேவாலயத்தில் ஏசுநாதருக்கு ஸ்தோத்திரம் சொல்லி விட்டுசென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம் ஏறும் வரை ஏதோ கனவு போலதான் இருந்தது.ஒரு வழியா லண்டன் வந்தாச்சு. 3 பெண்களுடன் ஷேரிங் ஒரு ரூம்ல,பேயிங் கெஸ்ட் மாதிரி.பிரம்மாண்டமான கல்லூரி பிரமிப்பை தந்தது.

வேறு வேறு தேச மாணவர்கள்,ஆங்கிலத்தை இத்தனை விதமா பேச முடியுமா?பேச்சு புரிய பதில் பேசவே பல மாதங்கள் வேண்டும்.மெக்டில கொஞ்ச நாள்,பர்கர் கிங்ல கொஞ்ச நாள்னு பகுதி நேரவேலை தினசரி செலவுகளை சமாளிக்க போதுமானதா இருந்தது.,கல்லூரி,பிரண்ட்ஸ்னு நல்லாதான் போச்சு,அந்தஆர்தர் அகஸ்டீனை பாக்கற வரை.

நெதர்லாந்தை சேர்ந்த ஆர்தர், எஸ்தரை கவர்ந்தான் ஆறடிக்கு மேல் உயரமும்,சுருள்சுருளான முடியும் கூர்மையான முக அமைப்பும் எந்த பெண்ணையும் கவரும்தான்.மெதுவாக டேட்டிங்னு ஆரம்பிச்சு,சின்ன சின்ன தொடுதல்கள்னு தொடர்ந்து,ஒரு வீக் எண்ட் பிக்னிக்னு போர்ன்மவுத் கடற்கரைநகரத்தில் கடற்கரை நோக்கிய சொகுசு ஹோட்டலில் மிக நெருக்கத்தில் என்னை முற்றிலுமாய் இழந்தது என்னை அறியாமலே முடிந்தது.

அடுத்த வாரம்,தேம்ஸ் வாக் வீதியில் கை கோர்த்து நடந்த போது“எஸ்தர் நீ இனி எனக்காக வேலை செய்கிறாய் சரியா?”இது கொஞ்சம் வித்யாசமா அதிகாரத் தொனில வந்தது எனக்குகொஞ்சம் அதிர்ச்சிதான்.

முதலில் ஏதோ விளையாடுகிறான்னு நினைச்சேன்.மிரட்டும்தொனியில் மீண்டும் சொன்ன போது அதிர்ந்து போனேன்.கல்லூரியில் மாணவர்களிடம் போதைப் பொருட்களை பரப்பணும், சொல்ற இடத்துக்கு போதைப் பொருட்களை கொண்டு போகணும்.இதை யார் கிட்ட சொல்ல முயற்சி பண்ணினாலும் என்னோட நீபண்ணின நெருக்கமான அந்தரங்க, ரகசிய களியாட்டங்கள் வலைதளத்தில்,உலகெங்கும் வெளியிடப் படும்.

எனக்கு என்ன பண்றதுனு தெரியலை,ஆர்தரின் கொடூரமான மறுமுகம் இப்பதான் தெரிந்தது.வலையில் சிக்கிய மீனானேன்.பலப் பல உத்தரவுகள் மொபைலில் வேறு வேறு பெயர்களில் வரும்.சிறிய பாக்கெட்கள் என்னிடம் வரும் சொன்ன இடத்தில் சேர்க்கணும்.

இப்போதெல்லாம் ஆர்தர் மறைந்து போனான்,நேரில் சந்திப்பதில்லை ஆனால் மொபைலில் அவ்வப்போது சின்ன கிளிப்பிங்மறைத்து வைத்திருந்த என் உடலின் ரகசியங்களை…..சே என்னசெய்யப் போறேன்,எப்படித் தப்பிக்கப் போறேன்னு தெரியலை..

ஒரு மாலை வேளை,என் மிகச் சிறந்த தோழி பிரேமாவோடஅந்த கிளப்பில் ஏதோ ஒரு மனநிலையில் அழுது புலம்பிஅத்தனையும் கொட்டிவிட்டேன்.அவளுடைய பாய் ஃபிரெண்ட் ராபர்ட்டும் கூட இருந்தான்.அவன்தான், “பயப்படாதீங்க இதை என் கிட்டவிடுங்க நான் பாத்துக்கறேன்”னான்.(அவன் ஸ்காட்லாண்ட் யார்ட் ரகசியப் போலீஸ்னுஅப்பறம்தான் பிரேமா சொன்னா)

ஆர்தர் ரொம்ப நாளைக்கு அப்பறம் நேரிடையா பேசினான்,”இது மிகப் பெரிய வேலை மாஸ்டர் தானே உன்னை சந்திப்பார் ஃபோன் மெசேஜை ஃபாலோ பண்ணு இந்த வேலை முடிஞ்சவுடனே உன்னை ஃப்ரீ ஆக்கிடறேன்னான். பயந்துட்டே ராபர்ட் கிட்ட ஃபோன் பண்ணி சொன்னேன்.அந்த ராபர்ட் அடுத்து வர உத்தரவை தைரியமா பண்ணுங்க உங்க பின்னால நான் இருக்கேன்,இது எங்கள் தேசத்துக்குநீங்க பண்ற பேருதவி.இந்த டிரக் ராக்கெட்டை உடைக்கதான் படாத பாடு படறோம்,உங்களை கோர்ட் கேஸ்னு மாட்ட விடாம நான் பாத்துக்கறேன்னான்.

யாரையாவது நம்பித்தானே ஆகணும். அதன் படிதான் இப்ப சவுத்ஹால் வந்து ஹைஸ்ட்ரீட்ல இருக்கற அந்த பவுண்ட்ஷாப் உள்ளே நுழைஞ்சேன்.ஒரு சரதார்ஜீ என்னை இடிக்கற மாதிரி நுழைஞ்சான். ”எஸ்தர்? கோ அண்ட் பர்சேஸ் ஆன் ஐஃபோன் சார்ஜர் ஜஸ்ட் கோ அவுட் ஹோல்டிங் இட் ஹை இன் யுவர் லெஃப்ட் ஹேண்ட்” சொல்லிட்டு வேகமா நடந்தான்.5 பவுண்ட் கொடுத்து அந்த சார்ஜரை வாங்கினேன்,இடது கையில் அதை தூக்கிப் பிடித்த வண்ணம் வெளியில வந்தவுடன் பேவ்மென்டை ஒட்டி சர்ர்ர்னு ஒரு கருப்பு டெஸ்லா கார் வந்து நின்று முன் கதவை திறந்தது,”ஹாப் இன் ஃபாஸ்ட்”ஒரு கரகர கருப்பு குரல் டிரைவர்.

சட்னு ஏறி உக்காந்தேன்.கார் விரைந்தது, அரை மணி நேர மெளனப் பயணத்தில் கலய்ஸ் ஜலசந்தியை நெருங்கினோம் என் பாஸ்போர்ட்அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டது. கருப்பு டிரைவர் அதிகாரிகளுக்கு விரைப்பாய் சலாம் வைத்தான்.அந்த டெஸ்லா கார் வாய் பிளந்து நின்ற குரூஸ் கப்பலுக்குள் நுழைந்தது. அந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலை பிரமிப்புடன் பார்த்தவாறு மொபைல் மெசேஜ் படி காஃபி ஷாப்பில் நுழைந்து 4ம் நம்பர் இருக்கையில் அமர்ந்தேன்-ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஹேண்ட்சம் மனிதர் ஒரு சூட்கேசுடன் எதிரில் அமர்ந்தார்.அந்த சூட்கேசை என்னிடம் தள்ளி “இதை பத்திரமா பிராண்டன் பெர்க் ஏர்போர்ட் வரை கொண்டு வா (ஜெர்மன் தலைநகர்பெர்லின் ஏர்போர்ட்)” சொல்லி விட்டு எழுந்திருக்க முயன்ற அவரை எங்கிருந்தோ வந்த நான்கு முரடர்கள் வளைத்துப் பிடித்தனர்.

சரேலன அவர் கையில் முளைத்த ரிவால்வர் என் பக்கம் திரும்பியது, ஒரு வெளிச்ச முனை என் வலது கையை முத்தமிட்டு மறைந்தது.சுரீர் வலியுடன் ரத்தம் பீரிட்ட கையை மடக்கி அமர வைத்தது ராபர்ட்டின் உரம் வாய்ந்த கரங்கள்.அடுத்த புல்லட் பாய்ந்து மற்றொருவரைத் தாக்க,  ஒரு ஏழெட்டு பேர் சேரந்து அந்த சர்வதேச கடத்தல் தலைவனை அமுக்கிப் பிடித்தனர்.

நான் யாரொ ஒரு மாணவி என இதில் என் பெயர் வராமல் ராபர்ட் பார்த்துக் கொண்டான்.மறு நாளே பெர்லின் தெருவில் போலீசாரால் தப்ப முயன்ற போதைப் பொருள் கடத்தல்காரன் என ஆர்தர் அகஸ்டீன் சுட்டுக் கொல்லப் பட்டான். கைப் புண் மெதுவே ஆறி வருகிறது.இப்பல்லாம் லண்டன் நகர கவர்ச்சிகள் எனக்கு கசந்தன.

தேம்ஸ் ஆறு அழகுதான்,படு சுத்தம்தான்.ஆனால் சென்னையின் கூவமும்,அடையார் நதிகள் அழுக்குதான் ஆனால் குற்றமற்றவை. என்றாவது ஒருநாள் எங்கள் சென்னை நதிகளும் சுத்தம் ஆகும்,அலங்காரப் படகுகள் மிதக்கும். நம் தமிழகம் ஒருநாள் உலகம் போற்றும் உன்னத நாடாக மாறும் ஆங்கிலேயர்கள்,மற்ற பிற நாட்டு மாணவர்கள் உயர் கல்விக்காக தமிழ் நாட்டிற்கு வருவர்.

கண்டிப்பாக நடக்கும் பாருங்கள்.இன்னிக்குதான் பர்மிங்ஹாம் ஏர்போர்ட்ல இருந்து துபாய் வழியா சென்னை ஏர்போர்ட் வந்து சேந்தேன்.பி.எட் படிச்சு டீச்சர் ஆகப் போறேன்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!