அணிகலன்
கடலில் வானவில் போல
வண்ண வண்ண
நட்சத்திர மீன்கள்
கடல் கன்னிகள்
காதுகளில் காதணியாக
கழுத்திலே மாலையாக
மின்னுவதைக் கண்ட
என்னவளும் கடல் நட்சத்திர
வடிவ அணிகலன்களைத்
தேடி கடை கடையாக
ஏறி இறங்கினாள்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
