அருந்தவும் அரைவயிற்றுக்கும் உணவில்லா வறியவரும்
விருந்தென வயிற்றுக்குண்டபின் மீந்ததை வீணாக்குவோரும்
ஒன்றெனவே ஓருலகிலே வாழ்ந்திருக்கும் நிலையது
நன்றெனவே ஆகாத நிலையிலா நிலையன்றோ
தன்பசி போலன்றோ தரணியுளவர்க்கும் என்றுணர்ந்தே
பிறன்பசி போக்கவே பங்கிட்டு பகிர்ந்திடில்
பட்டினி பசியதை பார்க்கவும் இயலுமோ
இல்லாதோர்க்கும் இயலுமானதை அளிப்போம் என்றால்
எல்லாருக்கும் கிடைத்திடுமே எப்போதுமே விருந்துணவு
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: அருந்தவும்
previous post