அழலின் நிறம் பிரதிபலிக்கும் தேளே…
கொடிய விஷத்தை கொடுக்கினில் கொண்டாய்… நெருப்பு குழம்பில் அழகாய் மின்னினாய்…
இருளில் வாழ்வாய் ஒளியில் மறைவாய்…
ஒரு கொட்டில் வாழ்க்கை
முடியும்…
இவன் என்றும்
காலனின் தூதன்…
கருஞ்சிலையில் மேனி, கொடியவனின் நஞ்சு…
தனல் நிலத்தில் ஒளிமிகு
பூச்சி…
ஒவ்வொரு கால்களும் உறுதியாய் பதிந்திட…
மெல்ல நடை போட்டு
வரும் ஆபத்து…
பார்த்தாலே திகில்
உணர்வின் பயம் அவன்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: அழலின்
previous post