படம் பார்த்து கவி: இரண்டு

by admin 3
1 views

இரண்டு நண்பர்கள், கருத்த உடலுடன்,
நேராக நின்று, உதவ தயாராய்.
ஒருவர் தட்டை தலை
மற்றவர்  கூர்மை தலை
ஒவ்வொரு போல்ட்டிற்கும் தனித்திறன் கொண்டவர்.
சுழற்றி இறுக்க, அல்லது மெதுவாக தளர்த்த,
அவர்கள் கைகளில் சக்தி, துல்லியம், உறுதி.
வீட்டிலும், காரியாலயத்திலும், ஒவ்வொரு பணிக்கும்,
இந்த திருகுக்குறடு ஜோடி, எப்போதும் நம்பகமானது.
சிறிய கருவியாய் தோன்றினாலும்,
பெரிய வேலைகளை எளிதாக்குகிறது.
தினசரி வாழ்வில் இவர்களின் பங்கு பெரிது,
மவுனமாய் உழைத்து, நம்மை மகிழ்விக்கிறது.

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!